• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தனியார்மயம் ஆன கையோடு அநியாயம்... வீதிகளில் வீசப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்: சு.வெங்கடேசன்

தனியார்மயம் ஆன கையோடு அநியாயம்... வீதிகளில் வீசப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்: சு.வெங்கடேசன்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அவ்வாறு குடியிருப்புகளை காலி செய்யவில்லை என்றால்  ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  • Share this:
    ஏர் இந்தியா ஊழியர்கள் 6 மாதத்தில் நிறுவன குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்றும்  இல்லையேல் ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், அதனை தொடங்கி நடத்திய டாட்டா குழுமத்தின் கைகளுக்கே சென்றுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமத்திடம் மத்திய அரசு விற்பனை செய்தது. இதனை மத்திய அரசும், டாட்டா நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் விலைக்கு வாங்கியுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான  தங்கும் இடங்களைகாலி செய்ய வேண்டும் என்று   ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதை கண்டித்து நவம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

    இந்த விவகாரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய விமான போக்குவரத்து  அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,  ஏர் இந்தியா நிறுவனத்தை கைமாற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான ஆறு மாதங்களுக்குள் ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: முடிவுக்கு வரும் ஒர்க் ஃப்ரம் ஹோம்- ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைக்கும் டி.சி.எஸ்


    சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  அவ்வாறு குடியிருப்புகளை காலி செய்யவில்லை என்றால்  ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த ஊழியர்கள் ஏர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போதுவரை பங்கேற்றி கொண்டிருப்பவர்கள்.  அவர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். தனியார்மயம் குறித்து கருத்து கூறுவது என நோக்கம் அல்ல. ஆனால், தனியார் மயத்துக்கு பின் ஊழியர்களின் நிலை என்ன என்பதை நிர்வாகத்தின் அணுகுமுறை காட்டுகிறது.  அவர்களின் மதிப்புக்கு  சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கேட்டுகொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: