599 ஆண்கள் நிறைந்த கல்லூரியில் நான் ஒரே பெண்..!- அமிதாப் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி

’இன்ஃபோசிஸ் அறக்கட்டளை மூலம் தேவதாசி மக்களுக்காக 16 ஆயிரம் கழிப்பறைகளைக் கட்டித் தந்துள்ளோம்’.

599 ஆண்கள் நிறைந்த கல்லூரியில் நான் ஒரே பெண்..!- அமிதாப் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி
சுதா மூர்த்தி
  • News18
  • Last Updated: November 27, 2019, 6:52 PM IST
  • Share this:
599 மாணவர்கள் நிறைந்த கல்லூரியில் ஒரேயொரு மாணவியாக தான் கடந்து வந்த பாதையை நடிகர் அமிதாப் பச்சனின் ‘குரோர்பதி 11’ நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி பகிர்ந்துகொண்டார்.

எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர் மற்றும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி அமிதாப் பச்சனின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுதா மூர்த்தி நிகழ்ச்சியில், “நான் கல்லூரிப் படிப்பில் சேர்ந்தபோது அங்கு படித்த ஒரேயொரு மாணவி நான் மட்டுமே. 599 மாணவர்கள் பயின்ற கல்லூரியில் நான் ஒரே பெண். நான் சேரும்போதே கல்லூரி முதல்வர் எனக்கு 3 நிபந்தனைகள் விதித்தார். சேலை மட்டும் அணிய வேண்டும், கேண்டீன் செல்லக் கூடாது, மாணவர்கள் உடன் பேசக் கூடாது.


இதையெல்லாம் கடந்துதான் படித்தேன். தற்போது பல சமூகம் சார்ந்த பணிகளைச் செய்து வருகிறேன். இன்ஃபோசிஸ் அறக்கட்டளை மூலம் தேவதாசி மக்களுக்காக 16 ஆயிரம் கழிப்பறைகளைக் கட்டித் தந்துள்ளோம். இது மிகவும் அவசியம்” என்று பேசியுள்ளார்.

மேலும் பார்க்க: 9 மாத நாய்க்குட்டிக்காக உருக்கமான வேண்டுகோள் விடுத்த ரத்தன் டாடா..!
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்