ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிறப்பானதையே செய்வார்... பிரிட்டன் பிரதமராகும் மருமகன் ரிஷி சுனக்கிற்கு மாமனார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி வாழ்த்து

சிறப்பானதையே செய்வார்... பிரிட்டன் பிரதமராகும் மருமகன் ரிஷி சுனக்கிற்கு மாமனார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி வாழ்த்து

நாராயண மூர்த்தி வாழ்த்து

நாராயண மூர்த்தி வாழ்த்து

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகிறார் என்கிற வரலாற்றை ரிஷி சுனக் படைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • internationa, Indiabritainbritainbritain

  பிரிட்டன் பிரதமராக தேர்வாகி இருக்கும் ரிஷ் சுனக்கிற்கு அவரது மாமனாரும் இன்ஃபோசில் நிறுவனத்தின் நிறுவனருமான நாராயண மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  பிரிட்டனில் நிலவும் பொருளாதார சிக்கலைச் சமாளிக்க முடியாமல் லிஸ் டிரஸ் அண்மையில் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.  இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரிட்டனின் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தேர்தல் போட்டியில் இருப்பவராக கருதப்பட்ட முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசி நேரத்தில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.

  மேலும், கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமராகவும் அவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

  கட்சி எம்.பி.க்கள் மத்தியில் பேசிய ரிஷி சுனக், கட்சிக்காக உழைக்க வாய்ப்பு கிடைத்தது தனது வாழ்க்கையில் மிகப்பெரும் பாக்கியம் என்று தெரிவித்தார். நாட்டுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். மிகப்பெரும் நாடான பிரிட்டன், தற்போது பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நிலைத்தன்மையும், ஒற்றுமையும் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறினார். நமது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்கவும், சவால்களிலிருந்து மீண்டுவரவும்  கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைக்க முன்னுரிமை அளித்து செயல்பட உள்ளதாக ரிஷி சுனக் உறுதியளித்தார்.

  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகிறார் என்கிற வரலாற்றை ரிஷி சுனக் படைத்துள்ளார். அவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  இதையும் படிங்கள்- எம்.பி டூ பிரதமர் .... ரிஷி சுனக் கடந்து வந்த அரசியல் பாதை!

  இந்நிலையில், ரிஷி சுனக்கிற்கு அவரது மாமனாரும் இன்ஃபோசில் நிறுவனத்தை நிறுவியவருமான நாராயண மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டியளித்த நாராயண மூர்த்தி, ‘"ரிஷிக்கு வாழ்த்துகள். அவரை நினைத்து பெருமைப்படுகிறோம், அவர் வெற்றிபெற வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னால் முடிந்ததைச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்’ என கூறியுள்ளார்.

  ரிஷி சுனக் கடந்த 2009-இல் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கிருஷ்ணா சுனக், அனோஷ்கா சுனக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Britain, Infosys, Prime minister, Rishi Sunak