தேசிய வாக்காளர் தினத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் என்னென்ன?

தேசிய வாக்காளர்கள் தினம்

இந்தியாவில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுதான் தேசிய வாக்காளர் தினத்தை மத்திய அரசு கொண்டாட தூண்டியது எனலாம்.

  • Share this:
இந்திய தேர்தல் ஆணையமானது கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதனை குறிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் (National Voters’ Day) கொண்டாப்படுகிறது. இது ராஷ்டிரிய மட்டதா திவாஸ் (Rashtriya Matdata Diwas) என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) அடித்தள தினத்தை நினைவுகூரும் வகையிலும்,  வாக்காளர்கள் சேர்க்கையை ஊக்குவித்தல், குறிப்பாக புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. அரசியலமைப்பின் 324-வது பிரிவு இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ECI - ன் உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் 1950-ல் நடைமுறைக்கு வந்திருந்தாலும் (இந்த ஆண்டு 71 ஆவது ஆண்டாக ECI அடியெடுத்து வைக்கிறது), இந்த தினத்தை கவுரவிக்க முறையான கொண்டாட்டம் தொடங்கியது 2011ல் தான்.

தேசிய வாக்காளர் தினத்தின் குறிக்கோள் (Objective of the National Voters’ Day) :

இந்தியாவில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுதான் தேசிய வாக்காளர் தினத்தை மத்திய அரசு கொண்டாட தூண்டியது எனலாம். வாக்களிக்கும் பணியில் பங்கேற்க இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு  `Proud to be a voter, ready to vote’ என்று எழுதப்பட்ட பேட்ஜ்கள் வழங்கப்படும். வாக்காளர்களாக சேருவதில் பலருக்கும் ஆர்வமின்மை ஏற்பட்டதால், இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் உள்ள தூண்டுதலாக இருந்தது. 

நாட்டில் அரசியல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி நாடு முழுவதும் 8.5 முதல் 10 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18 வயதை எட்டும் அனைத்து தகுதியான வாக்காளர்களையும் அரசாங்கம் அடையாளம் காணவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய வாக்காளர்கள் தங்கள் தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை ஜனவரி 25-ம் தேதி நியமிக்கப்பட்ட நாளில் ஒப்படைக்கப்படுவார்கள். 

நாட்டை ஆளுகின்ற தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரமளிக்கும் முயற்சியை மேலும் வலுப்படுத்த, இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் பெருமை உணர்வைத் தூண்டுவதற்காக,  `No voter to be left behind’ என்ற முழக்கம் உருவாக்கப்பட்டது. மக்கள், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தவும், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யவும், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதில் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் இருக்க குடிமக்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களை அரசாங்கம் இருகரம்கூப்பி  வரவேற்கிறது. 

வினாடி வினாக்கள், விவாதங்கள், போலி வாக்கெடுப்புகளை (quizzes, debates, mock polls) நடத்துவதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாளை அனுசரிக்க ஊக்குவிக்கப்படுகின்றன; இதனால் தகுதியுடைய மாணவர்கள்/மாணவர்களின் பெற்றோர்கள் வாக்களிக்க ஒரு புரிதல் ஏற்படும். இந்த முயற்சியை இன்னும் அதிகரிக்கும் பொருட்டு, இந்திய அரசு (Indian government) புதுமைகளுக்கான தேசிய விருது (National Award for innovation), என்ற ஒன்றை தேர்தல் எந்திரங்களால் தேர்தல் செயல்முறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கிறது.

கருப்பொருள்/தீம் சார்ந்த கொண்டாட்டம் (Theme-oriented celebration) :

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் ஜனவரி 25 -ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக (National Voters’ Day) இந்தியா மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறது. அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில்  Electoral Literacy for Stronger Democracy’ என்ற தலைப்பின் கீழ் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு Making our voters empowered, vigilant, safe and informed’ என்ற தலைப்பின் கீழ் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதை இது எதிர்நோக்குகிறது. கோவிட்-19 தொற்று காலத்தில், தேர்தல்களை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டிலும் இது கவனம் செலுத்துகிறது.
Published by:Ram Sankar
First published: