நாடு முழுவதுமுள்ள சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள்! அமித்ஷா உறுதி

சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜாவேத் அலி கான் தேசிய குடிமக்கள் பதிவு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அமல்படுத்தப்படுமா?’ என்று மாநிலங்களைவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

News18 Tamil
Updated: July 17, 2019, 6:58 PM IST
நாடு முழுவதுமுள்ள சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள்! அமித்ஷா உறுதி
அமித் ஷா
News18 Tamil
Updated: July 17, 2019, 6:58 PM IST
இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு தேசிய குடிமக்கள் பதிவின் மூலம் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கியா முஸ்லீம் உள்ளிட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில், கடந்த சில வருடங்களாக ஈடுபட்டுள்ளது.

அந்த தேசிய குடிமக்கள் பதிவு முறைப்படி செய்யப்படாததன் காரணமாக இந்தியர்கள் பலருடைய பெயர்கள் அதில் விடுபட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவை விட்டு விரட்டப்படும் சூழல் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, தேசிய குடிமக்கள் பதிவு திருத்தம் மேற்கொள்வதற்காக காலஅவகாசம் எடுக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில், சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜாவேத் அலி கான் தேசிய குடிமக்கள் பதிவு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அமல்படுத்தப்படுமா?’ என்று மாநிலங்களைவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘தற்போது, தேசிய குடிமக்கள் பதிவு அசாமுக்கு மட்டும் செயல்படுத்தப்படுகிறது. பா.ஜ.க அரசின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் சர்வதேச சட்டத்தின்படி வெளியேற்றப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், ‘அசாமுக்கான தேசிய குடிமக்கள் பதிவை வெளியிடுவதற்கான இறுதி நாளாக ஜூலை 31-ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், திருத்தங்கள் செய்யவேண்டிய தேவை உள்ளதால், இறுதி நாளை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Loading...

Also see:

First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...