ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அதனால், அங்கு சிக்கித் தவிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காபூல் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 107 இந்தியர்கள் உட்பட 168 பேரை இந்திய விமானப்படை விமானமான சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மீட்டது.
அதிகாலையில் காபூலில் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்திலுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இறங்கியது. காபூலில் இருந்து இந்தியா வந்த விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக 87 இந்தியர்களை மற்றொரு இந்திய விமானப்படை விமானம் மீட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
Also Read : ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா செய்து கொடுத்த வளர்ச்சித் திட்டங்கள் என்ன?
இந்த விமானத்தில் கைக்குழந்தைக்கு பாஸ்போர்ட் இல்லாமல பயணிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. ஆப்கான் சீக்கியரான கிரிபால் சிங் சோனியின் மகள் இக்னூர் பிறந்து ஒரு சில மதமே ஆன நிலையில் பாஸ்போர்ட் இல்லாததால், வெளியுறவு அமைச்சகம் சிறப்பு வழங்கி அந்தக் குழந்தை இந்தியா வர ஒப்புதல் அளித்துள்ளது.
Also Read : தாலிபான்களின் நண்பர்களான ஹக்கானி தீவிரவாதிகள் - இந்த கொலைகார அமைப்பின் பின்னணி என்ன?
ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு போலியோ தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவிய அறிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.