மத்திய அரசின் புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான 'அக்னிபத்'க்கு எதிரான பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தன கருத்தை ட்வீட் செய்துள்ளார்.
இளைஞர்களின் எதிர்ப்பை வன்முறையால் வெளிப்படுத்துவது கண்டு வருத்தப்படுவதாக அதில் தெரிவித்துள்ளார். அக்னிவீரர்களின் ஒழுக்கமும் திறமையும் அவர்களை "சிறந்த வேலைவாய்ப்பிற்கு" மாற்றும். இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்பை வழங்க வணிகக் குழு விரும்புவதாகவும் திரு மஹிந்திரா கூறியுள்ளார்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் உடற் பயிற்சியோடு திட்ட வரையறை உருவாக்குவது பற்றியும் நன்கு தெரிந்து கொண்டு வருவார்கள்.அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை மஹிந்திரா குழுமம் கொடுக்க விரும்புகிறது என்று திரு மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.
அக்னிபத் குறித்த வதந்திகளை பரப்பியதால் 35 வாட்ஸ்அப் குழுக்களுக்குத் தடை!
அவரது டீவீட்டைக் குறிப்பிட்டு ‘மஹிந்திரா நிறுவனம் அக்னி வீரனை எந்தப் பதவிகளில் அமர்த்தும்’ என்று ஒரு பயனர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா , "கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றில் தேர்ந்தவர்களாக வெளியே வருவார்கள். அது போக அவர்களது திட்டமிடும் அறிவுக் கூர்மையும் அதிகமாகவே இருக்கும். அக்னிவீரர்கள் தொழில்துறைக்கும் மாறிவரும் சந்தைக்கும் ஏற்ற தொழில்முறை தீர்வுகளை வழங்குபவர்களாக விளங்குவர். செயல்பாடுகள் முதல் நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை வரை எல்லா தொழில் அங்கங்களிலும் பனி செய்ய ஏற்றவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லா துறைகளிலும் வேலை உண்டு என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.