ஹோம் /நியூஸ் /இந்தியா /

டி20 உலகக் கோப்பை பைனல்.. நாய்க்குட்டியிடம் ஆருடம் கேட்ட தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா!

டி20 உலகக் கோப்பை பைனல்.. நாய்க்குட்டியிடம் ஆருடம் கேட்ட தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா!

ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா ஜாலி பதிவு

ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா ஜாலி பதிவு

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டி20 கோப்பை இறுதி போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என நாய் ஒன்றிடம் ஆருடம் கேட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு போட்டிகள் நிறைவடைந்து இந்த தொடர் தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகள் எடுத்த அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

  அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு எந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. பொதுவாக விளையாட்டு போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆருடத்தை விலங்குகளிடம் கேட்டு கணிக்கும் வழக்கம் உண்டு. உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் இரு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என ஆக்டோபஸ், ஆமை, யானை என பல விலங்குகளிடம் கேட்டு அது பலிக்கிறதா என பார்க்கும் சுவாரஸ்யமான செயலை மேலை நாடுகளில் செய்வார்கள்.

  அவ்வாறு, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டி20 கோப்பை இறுதி போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என நாய் ஒன்றிடம் ஆருடம் கேட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாய் ஒன்று சாகசமான முறையில் மரத்தில் ஏறி சுவரை எட்டி பார்க்கும் வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், இந்த நாய்க்குட்டியிடம் எதிர்காலத்தை பார்த்து டி20 இறுதிப்போட்டிக்கு யார் செல்வார்கள் எனக் கேட்டேன். அது வித்தியாசமான முறையில் சுவரை தாண்டி பார்த்துக்கொண்டிருக்கிறது. அது என்ன பார்த்திருக்கும் என நினைக்கிறீர்கள் என்றுள்ளார்.

  ஆனந்த் மஹேந்திராவின் இந்த நையாண்டி பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நாட்டின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா. முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.

  இதையும் படிங்க: கொசுக்களை பிடித்து நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிரபல தாதா.. வழக்கு விசாரணையில் பரபரப்பு!

  தனித்துவமான விஷயங்கள், சாதனை செயல்கள், அறிவுசார் தகவல்களை சமூக வலைத்தளங்களில் உலாவினால் அதை கண்டறிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தவறாமல் பதிவு செய்து வருகிறார் இவர். எனவே, இவர் ட்வீட்களுக்கு என பிரத்தியேக பாலோயர்கள் கூட்டம் உள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Anand Mahindra, T20 World Cup, Twitter, Viral News