ஜூலையில் தொழில்துறை உற்பத்தி 10.4% வீழ்ச்சி: தேசிய புள்ளியியல் அமைச்சக அறிக்கை..

ஜூலையில் தொழில்துறை உற்பத்தி 10.4% வீழ்ச்சி: தேசிய புள்ளியியல் அமைச்சக அறிக்கை..

கோப்பு படம்

ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 10.4 விழுக்காடு வீழ்ச்சியை கண்டுள்ளது. தேசிய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், நுகர்வோர் சார்ந்த பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகள் சரிவை சந்தித்துள்ளன.

 • Share this:

  இதன்மூலம் தொழில்துறை உற்பத்தி 10.4 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவே முந்தைய மாதங்களான ஜூன் மாதத்தில் தொழில்துறை குறியீடு 16.6 விழுக்காடும், மே மாதத்தில் 33.8 விழுக்காடும், ஏப்ரல் மாதத்தில் 57. 6 விழுக்காடாகவும் வீழ்ச்சி கண்டிருந்தது.

  ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் தொழில்துறை உற்பத்தி 29.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில் இதேகாலகட்டத்தில் தொழில்துறை உற்பத்தி 3.5 விழுக்காடாக உயர்ந்திருந்தது.

  மேலும் படிக்க...ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது: 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி.  தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதுடன், அரசு சில துறைகளில் ஊக்குவிப்புகளை அறிவித்து வருவதால் இனி வரும் மாதங்களில் தொழில்துறை வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Vaijayanthi S
  First published: