Home /News /national /

Sheena Bora | ஷீனா போரா உயிரோடு தான் இருக்கிறார் - ஷாக் கொடுத்த இந்திராணி முகர்ஜி - அதிரடி திருப்பம்

Sheena Bora | ஷீனா போரா உயிரோடு தான் இருக்கிறார் - ஷாக் கொடுத்த இந்திராணி முகர்ஜி - அதிரடி திருப்பம்

Sheena bora

Sheena bora

கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக அவரின் தாயார் இந்திராணி முகர்ஜி சிபிஐ-க்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  இந்தியாவையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றாக திகழும் ஷீனா போரா கொலை வழக்கு, கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு திருப்பங்களை கண்டு வருகிறது. மும்பை போலீசாரையும், சிபிஐ-யும் திணறடித்த இந்த வழக்கில் தனது மகளையே கொலை செய்ததாக ஊடகவியலாளர் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக இருந்ததாக இந்திராணியின் 3வது கணவரும் கைதாகி பிணையில் வெளிவந்தார்.

  இந்நிலையில் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக அவரின் தாயார் இந்திராணி முகர்ஜி சிபிஐ-க்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஷீனா போரா காஷ்மீரில் இருப்பதாக அவர் சிபிஐக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் பரபரப்படைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ளதாக சிபிஐ அறிவித்திருந்தது.

  ஷீனா போரா கொலை வழக்கு:

  மும்பை மெட்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வந்த 24 வயது இளம் பெண் ஷீனா போரா, கடந்த 24 ஏப்ரல் 2012 அன்று திடீரென மாயமானார். அன்றைய தினம் தனது அலுவலக பணியை ராஜினாமா செய்வதாக ஷீனா போரா எழுதிய கடிதம் கிடைத்தது. அன்றைய தினமே தான் காதலித்து வந்த ராகுல் முகர்ஜியுடன் காதலை முறித்துக் கொள்வதாக அவரின் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் சென்றது. அதன் பிறகு ஷீனா போரை யாரும் பார்க்கவில்லை.

  இதையும் படிங்க:   காதலியின் கணவரிடம் இருந்து தப்ப 5வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் மரணம்

  திடீரென காதலை முறித்ததால் ராகுல் சந்தேகமடைந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், ஆனால் அவரின் புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஷீனாவின் தாயார் இந்திராணியிடம் கேட்டதற்கு அவர், உன்னுடைய காதல் தொந்தரவுகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்.

  Sheena Bora murder: Indrani Mukerjea to be produced in court | India News – India TV
  இந்திராணி


  ஆனால் ஷீனாவின் பாஸ்போர்ட் என்னிடம் உள்ளதே என ராகுல் கேட்டதற்கு, அவர் வேறு பாஸ்போர்டில் சென்றுவிட்டதாக இந்திராணி பதிலளித்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு ராகுல் அளித்த நெருக்கடியால் இந்திராணி முகர்ஜி விசாரிக்கபப்ட்ட போதும் இதே பதிலை தான் அவர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

  இதையும் படிங்க:   விஜய் சேதுபதியும் வில்லங்கமும்.. ஜல்லிக்கட்டு டூ பெங்களூரு விமான நிலையம் வரை

  இந்திராணியின் முதல் கணவர் சித்தார்த்தா தாஸ்-க்கு பிறந்தவர் தான் ஷீனா போரா. அவரை விவாகரத்து செய்துவிட்டு அவர் சஞ்சீவ் கண்ணா என்பவரை மணந்தார். இதன் மூலம் ஒரு மகனையும் பெற்றெடுத்துள்ளார். அவரை விவாகரத்து செய்துவிட்டு பீட்டர் முகர்ஜி என்பவரை திருமணம் செய்தார். இந்த நேரத்தில் ஷீனா போரா இந்திரானியின் பெற்றோரிடம் வளர்ந்து வந்தார். பின்னர் அவரை மும்பைக்கு தன்னுடன் வரவழைத்து பீட்டரிடம், ஷீனாவை தனது தங்கை என அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். பீட்டரின் முதல் மனைவியின் மகன் ராகுல் முகர்ஜியை தான் ஷீனா போரா காதலித்து வந்துள்ளார்.

  Sheena Bora murder case: Came to know Indrani was Sheena's mother in 2014, says help | India News,The Indian Express
  ஷீனா போரா


  இந்த நிலையில் தான் திடீரென ஷீனா போரா மாயமானார். ஷீனா போராவை இரண்டாம் கணவருடன் சேர்ந்து கொண்டு இந்திரானி காரில் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இக்கொலைக்கு கார் ஓட்டுனரும், பீட்டரும் உடந்தை எனவும் கூறப்படுகிறது. ஷீனாவின் கார் ஓட்டுனர் 2015ம் ஆண்டு வேறு வழக்கு ஒன்றில் கைதான போது தான் ஷீனா கொலை விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது.

  இதையும் படிங்க:    இந்தியாவில் 21.. மற்ற நாடுகளில் பெண்களின் திருமண வயது என்ன?

  அதே போல ராய்கட் மாவட்டத்தில் வைத்து ஷீனாவின் உடலை எரித்து அப்புறப்படுத்தியதாகவும் கார் ஓட்டுனர் அப்ரூவர் ஆக மாறினார். 2015ம் ஆண்டு இந்த வழக்கில் இந்திராணியும், பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டனர். 2019ம் ஆண்டு பீட்டர் இந்திராணியை விவாகரத்து செய்ய, 2020ம் ஆண்டு சிறையில் இருந்து பிணையில் வெளிவந்தார். இந்திராணி தற்போதும் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Arun
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Mumbai

  அடுத்த செய்தி