Home /News /national /

17,000 அடி உயரத்தில் யோகா பயிற்சி செய்த இந்தோ திபெத் எல்லைப்படை வீரர்கள்

17,000 அடி உயரத்தில் யோகா பயிற்சி செய்த இந்தோ திபெத் எல்லைப்படை வீரர்கள்

17,000 அடி உயரத்தில் யோகா பயிற்சி

17,000 அடி உயரத்தில் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினமான இன்று 17,000 அடி உயரத்தில் இந்தோ-திபெத் எல்லைப் படை வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர்.

    2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் யோக தினத்தை முன்மொழிந்து அது 177 நாடுகளால் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2015 முதல் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுதினை கொண்ட நாள் என்பதால் ஜூன் 21ஆம் நாள் சர்வதேச யோகா தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

    இந்தாண்டும் 8ஆவது சர்வதேச யோக தினம் உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகா மாநிலம் மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்லாயிரக்கணக்கானோருடன் இணைந்து யோக பயிற்சி செய்தார்.

    இதே போல், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் 25 கோடி பேர் இன்று யோகா தினத்தில் பங்கேற்று பயிற்சி மேற்கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வாக, 17,000 அடி உயரத்தில் இந்தோ-திபெத் எல்லைப் படை வீரர்கள் சர்வதேச யோகா தினத்தில் யோகா பயிற்சி செய்தனர்.


    இந்திய சீனா எல்லையான இமயமலை சிகரங்கள் கொண்ட லடாக்கில் இந்த யோகா பயிற்சியை அவர்கள் மேற்கொண்டனர். அத்துடன் சர்வதேச யோகா தினத்திற்கு இந்தோ-திபெத் எல்லைப் படை பாடல் ஒன்றை சமர்ப்பணம் செய்துள்ளது. லடாக் மட்டுமல்லாது, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் இந்தோ திபெத் எல்லை வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: 111 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்த இந்திய தேர்தல் ஆணையம்

    கடும் குளிர் கொண்ட பனி படர்ந்த எல்லைப் பகுதியில் யோகா செய்யும் ராணுவ வீரர்களை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Indo-Tibetan Border Police, Yoga day

    அடுத்த செய்தி