• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • IndiGo : ஜூலை 5 முதல் பீகாரின் தர்பங்காவிற்கு தினசரி விமானங்கள் - இண்டிகோ அறிவிப்பு!

IndiGo : ஜூலை 5 முதல் பீகாரின் தர்பங்காவிற்கு தினசரி விமானங்கள் - இண்டிகோ அறிவிப்பு!

இண்டிகோ

இண்டிகோ

ஜூலை 5 முதல் தர்பங்காவை (Darbhanga) கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்துடன் இணைக்கும் விமான சேவைகளை துவக்க போவதாக இண்டிகோ சமீபத்தில் தெரிவித்துள்ளது.

  • Share this:
இந்தியாவின் வெற்றிகரமான தனியார் விமான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ். ஹரியானாவில் உள்ள குர்கானை தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் இன்டிகோ (IndiGo airlines). பயணிகளுக்கான குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று.

இந்நிலையில் ஜூலை 5 முதல் தர்பங்காவை (Darbhanga) கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்துடன் இணைக்கும் விமான சேவைகளை துவக்க போவதாக இண்டிகோ சமீபத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாட்டின் விமானத்துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், Darbhanga பீஹாரில் 6-வது பெரிய பெருநகரமாக இருப்பதால், மாநிலங்களில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் அதிகரித்து வரும் வாய்ப்புகள் காரணமாக தர்பங்கா இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். கொல்கத்தா-தர்பங்கா மற்றும் ஹைதராபாத்-தர்பங்கா விமானங்கள் தினசரி இயக்கப்படும் விமானங்களாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  நார்வே பனிப்பாறையில் 500 ஆண்டுகள் பழமையான மெழுகுவர்த்தி பெட்டி கண்டுபிடிப்பு!

கடந்த பிப்ரவரி இறுதிக்குள் உள்நாட்டு விமானப் பயணம் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் பயணிகளை எட்டிய நேரத்தில் தொற்று நோயின் இரண்டாவது அலை காரணமாக தற்போது இது ஒரு நாளைக்கு சுமார் 85,000 பயணிகளாக குறைந்துள்ளது.

புள்ளிவிவரங்களின் படி, உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் ஏப்ரல் மாதத்தில் சுமார் 57.3 லட்சமாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, மே மாதத்தில் 19.20 லட்சம் பயணிகள் என்ற எண்ணிக்கைக்கு சுருங்கியது.

ALSO READ | 28 மனைவிகள் முன் 37-வது திருமணம் செய்த பலே தாத்தா - வைரல் வீடியோ

தொற்றின் இரண்டாவது அலை காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மாதந்தோறும் சுமார் 65-67% வீழ்ச்சியை பதிவு செய்கிறது. உள்நாட்டு பயணிகளின் போக்குவரத்து ஜூன்-ஜூலை 2020 அளவை விட நடப்பாண்டு குறைந்து விட்டதை இந்த வீழ்ச்சி காட்டுவதாக ரேட்டிங் ஏஜென்சியான Icra தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய Icra-வின் துணை தலைவர் கிஞ்சல் ஷா, "கடந்த மாதம் அதாவது மே 2021 ஆம் ஆண்டில், தினசரி புறப்பாடின் சராசரி 900-ஆக இருந்தது, ஏப்ரல் 2021-ல் இது 2,000 ஆக இருந்தது. மே மாதத்தில் ஒரு விமானத்தின் சராசரி பயணிகளின் எண்ணிக்கை 72 ,ஏப்ரல் 2021-ல் ஒரு விமானத்தின் சராசரி பயணிகள் எண்ணிக்கை 93" என்று குறிப்பிட்டார்.

ALSO READ | ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் குஷாக் எஸ்யூவி கார்கள் விரைவில் அறிமுகம்!

இந்த படிப்படியான வீழ்ச்சி கோவிட் இரண்டாவது அலையின் தாக்கத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார். அதே நேரத்தில் பொழுதுபோக்கு ட்ரிப்கள் மற்றும் பிஸினஸ் டிராவல் இரண்டும் மாநில அளவிலான பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தொற்று நோய் பரவல் காரணமாக குறைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து வழக்கமான வணிக சர்வதேச விமான சேவைகள் இல்லாத நிலையில், பல்வேறு நாடுகளுடன் வந்தே பாரத் மிஷன் மற்றும் ஏர் பபுள் ஒப்பந்தங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச பயணிகள் போக்குவரத்து சுமார் 1.4 லட்சமாக இருந்தது, இதில் சர்வதேச விமான பயணிகள் எண்ணிக்கையில் தொடர்ச்சியாக 96 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

ALSO READ | ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து தென் ஆஃப்ரிக்க பெண் உலக சாதனை

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், குவைத், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகளால் இந்தியாவிலிருந்து வரும் அல்லது செல்லும் விமானங்களை ரத்து செய்ததன் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாத இறுதியில் விமானங்களுக்கான உள்நாட்டு திறன் வரிசைப்படுத்தலை (domestic capacity deployment) 33% ஆக இருந்து, டிசம்பரில் 80% ஆக உயர்த்திய பின், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கோவிட்டுக்கு முந்தைய நிலைகளில் 50% ஆக குறைத்துள்ளது.

ALSO READ | பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு ஜாலி டூர் செல்ல முயன்ற சிறுமிகள்: விபத்தில் முடிந்த சோகம்!

இதனுடன், கட்டணங்களுக்கான குறைந்த வரம்பை 13 முதல் 16 சதவீதம் வரை அமைச்சகம் உயர்த்தியது, உள்நாட்டு பயணங்களுக்கான தேவை குறைவாக இருப்பதால், குறைக்கப்பட்ட திறன் விமான நடவடிக்கைகள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று Icra தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: