விமானப் பயணத்தின் போது பயணிகள் விமானத்திற்குள் அத்துமீறி சேட்டைகள் செய்யும் சம்பவங்கள் சமீப காலமாகவே அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு தான் இன்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் விமான சிப்பந்தி பெண்ணிடம் வைத்த பகீர் கோரிக்கை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் கோவிந்த் சர்மா என்ற யூசர் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இன்டிகோ விமானத்திற்குள் எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்தில் அமர்ந்துள்ள நிலையில் விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருக்கிறது. அப்போது ஜன்னல் சீட்டில் அமர்ந்திருக்கும் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணை அழைத்து ப்ளீஸ் ஜன்னல் கதவ கொஞ்சம் திறக்குறீங்களா, குட்கா எச்சிலை நான் துப்பனும் என்று கூற, பணிப்பெண் ஒரு நிமிடம் திகைத்துப்போய் பின்னர் சிரிக்கிறார். தொடர்ந்து பயணியும் அருகில் இருந்தவர்களும் சிரித்தனர்.
View this post on Instagram
Prank விளையாட்டை போல அந்த பயணி பணிப்பெண்ணிடம் ஜாலியாக ஜன்னலை திறந்து விடுங்கள் எனக் கேட்டுள்ளார். அந்த பயணியின் பெயரும் அடையாளமும் இதுவரை வெளியாகவில்லை. கோவிந்தா சர்மா என்ற யூசர் பகிர்ந்த இந்த இன்ஸ்டா வீடியோ வைரலாக பரவி தற்போது டிரெண்டாகி வருகிறது. 10 நொடிக்கும் குறைவான இந்த கிளிப்பிற்கு சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air hostess, Flight travel, Indigo, Instagram, Viral Video