65 விமான சேவையை நிறுத்தியது கோ ஏர், இன்டிகோ

news18
Updated: March 13, 2018, 4:35 PM IST
65 விமான சேவையை நிறுத்தியது கோ ஏர், இன்டிகோ
இன்டிகோ விமானம்
news18
Updated: March 13, 2018, 4:35 PM IST
விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து வந்த உத்தரவை அடுத்து  தங்களது 65 விமான சேவையை  இன்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனம் நிறுத்தியுள்ளன.  அதிக பயணிகள் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இன்ஜின் இல்லாத காரணத்தினால் விமான போக்குவரத்து இயக்குநரகம் சேவையை நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.

கோ ஏர் என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏ320 ரக ஏர்பஸ் விமானம் 176 பயணிகளுடன் நேற்று இரவு டில்லியில் இருந்து மும்பை புறப்பட்டது. சிறிது தூரம் பறந்து கொண்டிருந்த போது நடுவானில் இன்ஜின் கோளராறு ஏற்பட்டதாக விமானி டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானம் தரையிறங்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததையடுத்து டில்லியில் தரையிறங்கியது. அதில் பயணித்த 176 பேர் உயிர் தப்பினர். இதே போன்று மும்பையிலிருந்து லக்னோ புறப்பட்ட விமானத்திலும் இன்ஜின் கோளாறு காரணமாக அகமதாபாத்தில் அவசரமாக தரையிறங்கியது.

இதன் காரணமாக, ஏ320 இன்ஜின் விமானங்களின் சேவையை நிறுத்துமாறு கோ ஏர் மற்றும் இன்டிகோ நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

இதனையடுத்து, பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான இன்டிகோ 47 விமான சேவையை நிறுத்தியுள்ளது. கோ ஏர் நிறுவனம் 18 விமான  சேவையை நிறுத்தியுள்ளது. திடீரென விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

 
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்