ஹோம் /நியூஸ் /இந்தியா /

இயற்கை அழகை ரசிக்க ரெடியா? தீபாவளி சர்ப்ரைஸ் கொடுத்த இண்டிகோ.. இதுதான் விவரம்!

இயற்கை அழகை ரசிக்க ரெடியா? தீபாவளி சர்ப்ரைஸ் கொடுத்த இண்டிகோ.. இதுதான் விவரம்!

indigo

indigo

இண்டிகோ நிறுவனம் தனது குளிர்காலத்திற்கான விமான சேவை அட்டவணையை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, IndiaINDIAINDIAINDIAINDIA

  இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ தனது பயணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளது.

  நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தீபாவளிக்கு முன்னதாகவே தனது பயணிகளுக்கு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது. அதன்படி, இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு விமான சேவைக்காக 8 புதிய விமானங்களை இயக்க உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

  8 புதிய விமானங்கள் இயக்கம்:

  இண்டிகோ நிறுவனம் தனது குளிர்காலத்திற்கான விமான சேவை அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் உள்நாட்டு விமான போக்குவரத்தை அதிகரிக்கும் விதமாக 8 புதிய விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, போபால்-உதய்பூர், அகமதாபாத்-ஜம்மு, ராஞ்சி-புவனேஸ்வர் மற்றும் இந்தூர்-சண்டிகர் ஆகிய வழித்தடங்களில் எட்டு பிரத்யேக விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

  இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையே விமான போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ள இண்டிகோ நிறுவனம் பிராந்திய இணைப்புத் திட்டத்தை (RCS) கொண்டு வந்துள்ளது. அதன்படி, உற்பத்தி துறையில் சிறந்து விளங்கக்கூடிய போபாலையும், அழகான சுற்றுலா தளமான உதய்பூரையும் இணைக்கும் விதமான விமான சேவையை தொடங்க உள்ளது.

  புதிய சேவைக்கான காரணம்:

  அழகிய நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட ராஞ்சிக்கும், சபர்மதி ஆற்றங்கரையின் பிரம்மிப்பூட்டும் அழகு கொண்ட உதய்பூருக்கும், வைர வியாபாரத்திற்கு பெயர் பெற்ற அகமதாபாத், வெண் பனி சூழ்ந்த மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கு பெயர் போன ஜம்மு , கோயில் நகரமான புவனேஸ்வர், சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய தூய்மையான நகரமான சண்டிகர், அற்புதமான அரண்மனைகள் மற்றும் கோயில்கள், நைட் மார்க்கெட் ஆகியவற்றைக் கொண்ட இந்தூர் என அந்தந்த மாநிலங்களின் கலை மற்றும் அழகியலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக சிறப்பு விமான சேவையை இயக்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

  இண்டிகோவின் தலைமை வியூகம் மற்றும் வருவாய் அதிகாரி சஞ்சய் குமார் கூறுகையில், “ஏழு மாநிலங்களுக்கு இடையே புதிய உள்நாட்டு வழித்தடங்களில் பிரத்யேக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இணைப்பு மற்றும் அணுகலை மேம்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உதான் திட்டத்தின் கீழ் போபால் மற்றும் உதய்பூர் இடையே நேரடி விமானங்களை தொடங்க உள்ளோம். இந்த மேம்படுத்தப்பட்ட பயணச்சேவையானது மாநிலங்களுக்கிடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க உதவும். எனவே மலிவான கட்டணங்கள், சரியான நேரத்திற்கு விமான இயக்கம், பயணிகளுக்கான மரியாதை மற்றும் சிறப்பான சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

  Read More: வெற்றிகரமாக 36 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்திய இஸ்ரோ..!

  புதிதாக பிசினஸ் தொடங்கியுள்ளவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் மலிவு விலையிலான விமான சேவையை பெற அதிகம் விரும்புகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பிசினஸ் கிளாஸ் மற்றும் சுற்றுலா பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 8 விமானங்களின் சேவை இருக்கும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

  Published by:Elakiya J
  First published:

  Tags: Indigo