இண்டிகோ விமானத்தில் ஆண்டு விழா சலுகை... டிக்கெட் விலை ரூ.915 மட்டுமே!

இண்டிகோ ஏர்லைன்

இந்த மூன்று தேதிகளில் டிக்கெட் புக் செய்யும் பயணிகள், ​​HSBC கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தினால் கூடுதலாக 5 சதவீதம் கேஷ்பேக்கை பெறலாம்.

  • Share this:
இண்டிகோ விமானம் நிறுவனம் தங்களது சேவையை ஆரம்பித்து 15 ஆண்டுகால நிறைவை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் தங்களது ஏர்லைனில் டிக்கெட் புக் செய்யும் விமான பயணிகளுக்கு பல சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அவை 2021ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி வரையிலான பயணத்திற்கு பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. சலுகைகளின்படி, உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் விலை ரூ.915 முதல் தொடங்கும் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச விமானங்களை ஒன்றோடொன்று இணைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு பல தள்ளுபடி கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, 'ஃபாஸ்ட் ஃபார்வர்ட், 6E ஃப்ளெக்ஸ், 6E பேக்போர்ட்' உள்ளிட்ட '6E' ஆட்-ஆன்ஸ ரூ. 315- என்ற விலையிலும், 'கார் வாடகை' சேவை ரூ. 315-லிருந்தும் தொடங்கும் விலைகளிலும் கிடைக்கும். மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளுக்கு முன்னும் பின்னும் விமான பயணங்களை ஒருவர் திட்டமிட்டால் இண்டிகோ வழங்கும் 15 வது ஆண்டு சிறப்பு சலுகை கிடைக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதவிர, இந்த மூன்று தேதிகளில் டிக்கெட் புக் செய்யும் பயணிகள், ​​HSBC கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தினால் கூடுதலாக 5 சதவீதம் கேஷ்பேக்கை பெறலாம். அதாவது ரூ. 750 வரை பெறலாம். இருப்பினும், குறைந்தபட்சம் ரூ .3000 பரிவர்த்தனையில் மட்டுமே கேஷ்பேக் சலுகை வழங்கப்படும். இது தொடர்பாக இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரொனோஜோய் தத்தா ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "இண்டிகோவுக்கு இது ஒரு முக்கியமான தருணம். தற்போது விமான நிறுவனம் 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறது.

மோசமான காலங்களில் கூட எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இண்டிகோ அணியின் சார்பாக, இந்த பயணத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்து வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் விமான சகோதரத்துவத்தின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது, ​​இண்டிகோ தனது 270 க்கும் மேற்பட்ட விமானங்களுடன், தினசரி 1,000 விமான பயணங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் 67 உள்நாட்டு இடங்களையும் 24 சர்வதேச இடங்களையும் இணைத்து வருகிறது. IATA டிராவல் பாஸிற்கான ஒரு பைலட் திட்டத்தை தொடங்க இண்டிகோ விமான நிறுவனம் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்துடன் (IATA) கூட்டு சேர்ந்துள்ளது. IATA டிராவல் பாஸ் என்பது கோவிட் -19 சோதனைகள் அல்லது தடுப்பூசிகளுக்கான அரசாங்கத் தேவைகளுக்கு ஏற்ப பயணிகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்க உதவும் ஒரு மொபைல் ஆப்பாக இருக்கும்.

Also read... இந்தியாவில் அறிமுகமானது BMW இண்டிவிஜுவல் 740Li M ஸ்போர்ட் எடிஷன்: விலை எவ்வளவு தெரியுமா?

மேலும், வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த சோதனைத் திட்டம் தொடங்கும் என்றும் இதனால் பயணிகள் தங்கள் சோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை அதிகாரிகளுடனும் விமான நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்ள முடியும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் சோதனை மையங்கள் பயணிகளுக்கு சோதனை முடிவுகள் அல்லது தடுப்பூசி சான்றிதழ்களை பாதுகாப்பாக அனுப்ப IATA டிராவல் பாஸ் செயலி உதவும் என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து, இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா கூறியதாவது, "இன்று, பெரும்பாலான நாடுகள் உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கான நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளன. மேலும் இந்த IATA டிராவல் பாஸ் அந்தந்த நாடுகளுக்கு தேவையான பயணிகள் தகவலை எளிதாக்கி டிஜிட்டல் மயமாக்கும். இந்த கண்டுபிடிப்பு சர்வதேச விமானப் பயண மீட்புக்கான ஒரு படியாகும். அதே நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தொந்தரவு இல்லாத அனுபவத்தை அளிக்கும், "என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து சுமார் 27 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தத்தை கீழ் இந்தியாவில் இருந்து சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Published by:Vinothini Aandisamy
First published: