இந்தியாவின் வலிமை ரபேல் : சிறப்புகள் என்னென்ன?

பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் கோல்டன் ஏரோஸ் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் சிறப்பையும் சீனா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள சிறந்த போர் விமானங்கள் குறித்தும் இப்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 12:23 PM IST
  • Share this:
இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்கள், 4.5 தலைமுறை வகையை சேர்ந்தவையாகும். பிரான்சின் தசால்ட் ஏவியேசன் நிறுவனம் தயாரித்துள்ள ரபேல் விமானங்கள்3700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டவை.

ரபேல் போர் விமானத்தின் எடை 9,500 கிலோவாகும், அதிகளவாக 24500 கிலோ எடைகொண்ட ஆயுதங்களை ரபேல் விமானங்கள் சுமந்து செல்லும். ரபேல் விமானம் 15.3 மீடடர் நீளமும், 10.9 மீட்டர் அகலமும், 5.3 மீட்டர் உயரமும் கொண்டதாகும்.

ரபேல் போர் விமானம் மணிக்கு 2,223 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். சுமார் 50,000 அடி உயரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். எதிரிகளின் இலக்குகளை கண்டறியும் வகையிலான ரேடார் கருவிகள், ஜாமர்கள், 10 மணிநேரத்திற்கு விமானத் தரவுகளை பதிவு செய்யும் வசதி, தேடுதல் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் உள்ளிட்ட வசதிகளும் ரபேலில் இடம்பெற்றுள்ளன.


கண்ணுக்கு எட்டும் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கும் வல்லமை கொண்ட ஐரோப்பாவின் மெடடோர், ஸ்கால்ப் நாசகாரி ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.இத்தகைய சிறப்பு வாய்ந்த ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் ஏரோஸ் படைப்பிரிவில் இணைந்து செயல்பட உள்ளன. கோல்டன் ஏரோஸ் படைப்பிரிவு 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்க...இந்திய விமானப்படையுடன்  இணைகிறது ரபேல்1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரிலும், 1999ஆம் ஆண்டு கார்கில் போரிலும் கோல்டன் ஏரோஸ் முக்கிய பங்காற்றின. மிக் 21 ரக போர் விமானங்களின் பயன்பாடு நிறுத்தப்பட்ட பிறகு, கோல்டன் ஏரோஸ் படைப்பிரிவு கலைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ரபேல் போர் விமானங்களை இயக்கும் வகையில் கோல்டன் ஏரோஸ் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading