Home /News /national /

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் தொடர்பு துண்டிப்பு என இஸ்ரோ தகவல்

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் தொடர்பு துண்டிப்பு என இஸ்ரோ தகவல்

தொடர்பை இழந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்

தொடர்பை இழந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்

2027ஆம் ஆண்டுக்குள் சுமார் 7,000 சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் விகே சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India
    நாட்டின் முதல் சிறிய ரக ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி இன்று காலை விண்ணில் பாய்ந்த நிலையில், இறுதி கட்டத்தில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தொலைந்த தொடர்பை மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக இஸ்ரோ அமைப்பு ட்விட்டரில் கூறியுள்ளது.

    இந்த சிறிய ரக ராக்கெட் திட்டம் குறித்து நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விகே சரஸ்வத் கூறுகையில், இது போன்ற சிறிய ரக ராக்கெட்டுகள் தான் சர்வதேச விண்வெளி திட்டத்தில் சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளன. 2027ஆம் ஆண்டுக்குள் சுமார் 7,000 சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டங்களுக்கான செலவு சுமார் 38 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, இந்தியாவின் எஸ்.எஸ்.எல்.வி.(SSLV) ரக முதல் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை போல் பெரிய ரகமாக இல்லாமல் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த SSLV ரக ராக்கெட்டை ஏவுவதற்கு 6 மணி நேரம் count down போதும் என இஸ்ரோ அறிவித்தது.

    அதன்படி, இன்று அதிகாலை 3.18 மணிக்கு இதற்கான count down தொடங்கி, காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த SSLV ரக ராக்கெட்டில், 145 கிலோ எடை உடைய, பூமியை கண்காணிக்க கூடிய இ.ஓ.எஸ் - 02 செயற்கைக்கோள் மற்றும் எட்டு கிலோ எடையிலான ஆசாதிசாட் செயற்கைக்கோள் ஆகியவை விண்ணிற்கு அனுப்பப்பட்டன.

    இதையும் படிங்க: மானியங்கள் பயனாளர்களை முறையாக சென்று சேர்கிறதா.. இந்திய ஏழைகளின் தேவை என்ன?

    இந்த ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை நேரில் பார்வையிடுவதற்காக கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: ISRO, Satellite launch, Sriharikota

    அடுத்த செய்தி