இந்தியாவின் பணக்கார முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 177 கோடி

news18
Updated: February 13, 2018, 12:32 PM IST
இந்தியாவின் பணக்கார முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 177 கோடி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
news18
Updated: February 13, 2018, 12:32 PM IST
இந்தியாவின் பணக்கார முதல்வரின் சொத்து மதிப்பு ரூ.  177 கோடி என தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் 31 மாநில  முதல்வர்களின் சொத்து மதிப்பு குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வின்படி ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான   சந்திரபாபு நாயுடு ரூ. 177 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதில், அவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 134.8  கோடி, அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 42.68  கோடி.

31 முதல்வர்களில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் கடைசி இடத்தில் உள்ளார். அவருடைய சொத்தின் மதிப்பு வெறும் ரூ. 26 லட்சம் மட்டுமே.

பட்டியலில் அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ. 129.57 கோடி மதிப்பு சொத்துக்களுடன் 2-ஆம் இடத்திலும், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்  ரூ. 48.31 கோடி மதிப்பு சொத்துக்களுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் (சொத்து மதிப்பு ரூ. 15.15  கோடி), மேகாலயா முதல்வர் முகுல் சங்மா (சொத்து மதிப்பு ரூ. 14.50  கோடி) ஆகியோர் முறையே 4 மற்றும் 5-ஆவது இடத்திலும் உள்ளனர்.
Loading...
31 முதல்வர்களில், 25 முதல்வர்களின் சொத்து மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

நாட்டில் 18 மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்த 18 முதல்வர்களில் ஒருவர் கூட பணக்கார முதல்வர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.

குறைவான  சொத்துகளுடைய முதல்வர்களில் மாணிக் சர்க்காரைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (சொத்து மதிப்பு ரூ. 30.45 லட்சம்), காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி (சொத்து மதிப்பு ரூ. 55.96 லட்சம்) ஆகியோர் உள்ளனர்.

குறைவான  சொத்துகளுடைய 10 முதல்வர்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 5 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 7.8 கோடி சொத்துக்களுடன் 12-ஆவது இடத்திலும், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி  ரூ. 9.6 கோடி சொத்துக்களுடன் 9-ஆவது இடத்திலும் உள்ளனர்.
First published: February 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்