உலகின் விலை உயர்ந்த தேர்தல் இந்திய மக்களவைத் தேர்தல்!

ஒரு வாக்களுக்கு 700 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மக்களவைத் தொகுதிக்கு சுமார் 1 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகின் விலை உயர்ந்த தேர்தல் இந்திய மக்களவைத் தேர்தல்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: June 4, 2019, 4:50 PM IST
  • Share this:
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தலாகக் கருதப்படும் இந்திய மக்களவைத் தேர்தல்தான் உலகின் அதிகம் செலவாகும் தேர்தலாகவும் உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், ‘90 கோடி வாக்களர்களை இணைக்கவும் கவரவும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சுமார் 60000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இது 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைவிட இருமடங்கு அதிக செலவு ஆகும்’ எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு வாக்காளருக்கு 700 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மக்களவைத் தொகுதிக்கு சுமார் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் அடிப்படையில் ஒரு வேட்பாளர் 70 லட்சம்  ரூபாய் வரை செலவிடலாம் எனக் கூறப்பட்டிருந்தது.


அமெரிக்காவின் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் 650 கோடி அமெரிக்க டாலர்களே செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: ஜூன் 8-ம் தேதி இலங்கை, மாலத்தீவுகள் சுற்றுப்பயணம்... தயாரானார் பிரதமர் மோடி!
First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading