Home /News /national /

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு புதிய உச்சம் - மாநில வாரியாக பாதிப்பு எவ்வளவு?

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு புதிய உச்சம் - மாநில வாரியாக பாதிப்பு எவ்வளவு?

Omicron in India

Omicron in India

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவில் ஓமைக்ரான் வேரியண்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    நாட்டின் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90,928 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 58,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைவிட 56.5% கூடுதலான எண்ணிக்கையில் இன்று பாதிப்பு பதிவாகி உள்ளது. ஓமைக்ரான் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஓமைக்ரான் தொற்றால் மேலும் 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவாக 797 பேர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 465 பேரும், ராஜஸ்தானில் 236 பேரும், கேரளாவில் 234 பேரும், கர்நாடகாவில் 226 பேரும், குஜராத்தில் 204 பேரும், தமிழகத்தில் 121 பேரும் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



    அசாம் மாநிலத்தில் புதிதாக நேற்று இருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் நாட்டில் ஓமைக்ரான் பரவல் கண்டறியப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்தது. இதுவரை 996 பேர் ஓமைக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    Also read:  இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...

    கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பாதிப்பு சமீப வாரங்களாக கடுமையாக அதிகரித்து நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் 3ம் அலை பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    Also read:  குடும்ப வாழ்க்கையை தொடங்க 'நல்ல நேரம்' அமையவில்லை என 11 ஆண்டுகளாக கணவரை காக்க வைத்த மனைவி - பரபரப்பு வழக்கு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 325 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 19,206 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். பாசிட்டிவிட்டி ரேட் 6.43% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,85,401 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 4,82,876 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 148.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    நேற்றைய தினம் 58,097 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது.

     
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி