Home /News /national /

இந்தியாவின் முதல் SSLV ராக்கெட் வெற்றிகமராக விண்ணில் ஏவப்பட்டது..கிராமப்புற மாணவ மாணவியர் நேரில் கண்டுகளிப்பு!

இந்தியாவின் முதல் SSLV ராக்கெட் வெற்றிகமராக விண்ணில் ஏவப்பட்டது..கிராமப்புற மாணவ மாணவியர் நேரில் கண்டுகளிப்பு!

SSLV ராக்கெட்

SSLV ராக்கெட்

இந்த ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை நேரில் பார்வையிடுவதற்காக கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா அழைத்து செல்லப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India
    இந்தியாவின் எஸ்.எஸ்.எல்.வி.(SSLV) ரக முதல் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை போல் பெரிய ரகமாக இல்லாமல் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த SSLV ரக ராக்கெட்டை ஏவுவதற்கு 6 மணி நேரம் count down போதும் என இஸ்ரோ அறிவித்தது.

    அதன்படி, இன்று அதிகாலை 3.18 மணிக்கு இதற்கான count down தொடங்கி, காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த SSLV ரக ராக்கெட்டில், 145 கிலோ எடை உடைய, பூமியை கண்காணிக்க கூடிய இ.ஓ.எஸ் - 02 செயற்கைக்கோள் மற்றும் எட்டு கிலோ எடையிலான ஆசாதிசாட் செயற்கைக்கோள் ஆகியவை விண்ணிற்கு அனுப்பப்பட்டன.

    இந்த ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை நேரில் பார்வையிடுவதற்காக கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மதுரை திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் உள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 20 பேரும் இந்த ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டா சென்றனர். ஆசாதிசாட் செயற்கைக்கோள் வடிவமைப்பில் இந்த மாணவிகள் ஈடுபட்டனர்.


    இந்தாண்டு பிஎஸ்எல்வி ரக விமானத்தில் வெற்றிகரமாக ஏவப்படும் மூன்றாவது முக்கிய திட்டம் இதுவாகும். ஏற்கனவே, கடந்த ஜூன் 30ஆம் தேதி PSLV-C53 விமானமும், பிப்ரவரி 14ஆம் தேதி PSLV-C52/EOS-04 விமானமும் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.. முதலமைச்சர்கள் ஸ்டாலின், கேசிஆர் பங்கேற்கவில்லை

    இந்த விமானத்தின் செயற்கைகோள்கள் மூலம் பருவநிலை முறையாக கண்டறியப்பட்டு வேளாண்மை, காடுகள் வளம் ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: ISRO, Isro launch, Sriharikota

    அடுத்த செய்தி