ஹோம் /நியூஸ் /இந்தியா /

106 வயது, 34 முறை வாக்களித்தவர்.. நாட்டின் முதல் வாக்காளர் காலமானார் - முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

106 வயது, 34 முறை வாக்களித்தவர்.. நாட்டின் முதல் வாக்காளர் காலமானார் - முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

இமாச்சலப் பிரதேசத்தில் நாட்டில் முதல் வாக்காளர் காலமானார்

இமாச்சலப் பிரதேசத்தில் நாட்டில் முதல் வாக்காளர் காலமானார்

மக்களவை தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துள்ள ஷியாம் சரண் மொத்தம் 34 முறை வாக்களித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Himachal Pradesh, India

    1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று, முதல் பொதுத்தேர்தல் 1951ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த முதல் தேர்தலில் வாக்களித்த வாக்காளர் தற்போது 106ஆவது வயதில் இன்று காலமானார். தனது மரணத்திற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் கூட இமாச்சலப் பிரதேச தேர்தலில் வாக்களித்து இவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு தான் தற்போது மறைந்துள்ளார்.

    இம்மாசலப் பிரதேசம் கின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி. 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த இவர், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட ஷியாம் 1951ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் தேர்தல் தொடங்கி இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துள்ளார்.

    மக்களவை தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துள்ள ஷியாம் சரண் மொத்தம் 34 முறை வாக்களித்துள்ளார். இமாச்சலப் பிரேதச மாநிலத்தில் நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் முதியோர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு தேர்தல் ஆணையம் தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கியது. அதன்படி, 106 வயதான ஷியாம் சரண் கடந்த புதன்கிழமை இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தபால் வாக்கை தனது வீட்டில் இருந்தே செலுத்தினார். தனது கடைசி வாக்கை செலுத்திய மூன்றாவது நாளில் இவர் காலமானார்.

    இதையும் படிங்க: நாடு முழுவதும் குப்பை கழிவுகளை நீக்கியதன் மூலம் அரசுக்கு ரூ.342.63 கோடி வருவாய் - மத்திய அமைச்சர் தகவல்!

    இவரது மறைவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.  அதேபோல், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோரும் ஷியாம் சரண் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என கின்னூர் மாவட்ட ஆணையர் ஹுசைன் சாதிக் தெரிவித்துள்ளார்.

    Published by:Kannan V
    First published:

    Tags: Himachal Pradesh, India