கொல்கத்தா அண்டர்வாட்டர்(Underwater Metro) மெட்ரோ திட்டம் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தாண்டு முழுமையாக செயல்படத்தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ((Underwater Metro) ரயில் திட்டம் 2023ஆம் ஆண்டு செயலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா மற்றும் ஹவுரா இடையே இந்த மெட்ரோ திட்டம் செயல்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முழு சேவை அடுத்த ஆண்டில் தொடங்கும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் திட்ட மேற்பார்வையாளர் மிதுன் கோஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சுரங்க கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 20 சதவீத பணிகள் அடுத்தாண்டு நிறைவு பெறும். ஹூக்ளி நதிக்கு அடியில் 33 மீட்டர் ஆழத்தில் ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அவசர கால வெளியேற்றத்திற்கு தனி பாதைகள் அமைக்கப்படுகின்றன என்றார்.
இதையும் படிங்க - அல்கொய்தா எங்களை பற்றி பேச தேவையில்லை... மாணவி முஸ்கானின் தந்தை காட்டமான பதில்
நீருக்கு அடியில் கட்டப்படும் நாட்டின் முதல் மெட்ரோ ரயில் திட்டம் இதுவே. 2006-07ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.8,575 கோடியாகும்.
இந்த மெட்ரோ திட்டத்தின் நீளம் 16.6 கி.மீ ஆகும். இதில் 520 மீ நதி படுகைக்குக் கீழ் செல்லவுள்ளது. சால்ட் லேக் செக்டார் -5, சால்ட் லேக் ஸ்டேடியம், சென்டரல் பார்க், சிட்டி சென்டர், பெங்கால் கெமிக்கல் மெட்ரோ ஸ்டேஷன் ஆகிய பகுதிகளை இந்த வழித்தடம் இணைக்கவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.