Home /News /national /

ஐடி வேலையை துறந்து கழுதை பண்ணை வைத்த நபருக்கு அடித்த ஜாக்பாட்

ஐடி வேலையை துறந்து கழுதை பண்ணை வைத்த நபருக்கு அடித்த ஜாக்பாட்

கழுதைப் பண்ணை

கழுதைப் பண்ணை

கழுதைப் பண்ணையில் கறக்கப்படும் கழுதைப் பாலை பாக்கெட்டுகளில் விற்க திட்டமிட்டுள்ளார் கவுடா.

    கர்நாடகா மாநிலத்தில் ஒரு நபர் தனது ஐ.டித் துறை வேலையை துறந்து கழுதைப் பண்ணை வைத்துள்ளார். கேரளா மாநிலம் ஏர்ணகுளத்தில் உள்ள கழுதைப் பண்ணைக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் உள்ள இரண்டாவது கழுதைப் பண்ணை இதுவே.

    கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாச கவுடா. 42 வயதான இவர் பிஏ பட்டதாரி ஆவார். இதற்கு முன்னர் ஐடி துறையில் வேலைப் பார்த்து வந்த இவர், 2020ஆம் ஆண்டு தனது வேலை துறையை துறந்து வேளாண் மற்றும் பண்ணைத் தொழிலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

    ஆரம்பத்தில் இவர் ஆடு, கோழி, முயல் போன்றவற்றை பண்ணையில் வளர்த்து வந்த நிலையில், இவருக்கு சமீப காலத்தில் தான் கழுதையின் மகத்துவம் தெரியவந்துள்ளது. கழுதைக்கு தான் கற்பூர வாசனை மகத்துவம் தெரியாது என்று நாம் கூறுவோம். ஆனால், சீனிவாச கவுடாவுக்கு கழுதையின் மகத்துவம் நன்றாகவே தெரிந்துள்ளது. அண்மைக் கலமாக சலவைத் தொழிலாளர்கள் கழுதையை தங்கள் தொழிலுக்கு பயன்படுத்துவது குறைந்துள்ளது எனவும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கழுதையின் தேவையை குறைத்துவிட்டன என்கிறார் சீனிவாச கவுடா.

    தான் முதலில் கழுதை வளர்க்கலாம் எனத் திட்டமிட்ட போது பலரும் அதை கிண்டல் செய்தனர், ஆனால் கழுதைப் பால் மிகவும் சுவையானது, விலை உயர்ந்தது மற்றும் சிறந்த மருத்துவ குணம் கொண்டது என்கிறார் அவர். 20 கழுதைகளைக் கொண்ட கழுதைப் பண்ணை ஒன்றை சீனிவாச கவுடா ஜூன் 8ஆம் தேதி ஆரம்பித்துள்ளார். இந்த கழுதைப் பண்ணையில் கறக்கப்படும் கழுதைப் பாலை பாக்கெட்டுகளில் விற்க திட்டமிட்டுள்ளார் கவுடா.

    இதையும் படிங்க: இந்தியாவில் புதியவகை டைனோசர்கள் முட்டைகள் கண்டுபிடிப்பு - ஆராய்ச்சியாளர்கள் வியப்பு

    30 மில்லி பாலை ரூ.150க்கு விற்கப்போவதாகக் கூறும் அவர் இவற்றை மளிகை கடைகள் மட்டுமல்லாது, மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்கவுள்ளாராம். அத்துடன் இந்த பாலை அழகு சாதன பொருள் உற்பத்திக்கும் பயன்படுத்தப் போகிறாராம் சீனிவாச கவுடா. தனது முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனக் கூறும் இவர் இதுவரை ரூ.17 லட்சத்துக்கு ஆர்டர் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Karnataka

    அடுத்த செய்தி