• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல., பாதுகாப்பு நிறைந்தது - பிரதமர் மோடி..

இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல., பாதுகாப்பு நிறைந்தது - பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் எரிசக்தி துறையில் சிறந்த எதிர்காலம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்திய எரிசக்தி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து காணொலி வாயிலாக சர்வதேச எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, கொரோனா காலத்திலும் எரிசக்தி துறையில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக  பெருமிதத்துடன் கூறினார். எரிசக்தி துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் வரும் காலத்தில் எரிசக்தி நுகர்வு இரு மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறினார்.

    சமூக பொருளாதார மாற்றங்கள் நிகழும்போது எரிசக்தி மலிவு விலையிலும், நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல பாதுகாப்பு நிறைந்தது எனக் கூறினார்.

    மேலும் படிக்க...காங்கிரஸின் வெறுப்பு பிரச்சாரம் மோடியின் மக்கள் செல்வாக்கை அதிகரிக்கும் - ஜே.பி.நட்டா ஆவேசம்



    இதனிடையே, 3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: