• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு! உலக வங்கி அறிக்கை

வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு! உலக வங்கி அறிக்கை

உலக வங்கி

உலக வங்கி

தொழில்துறை உற்பத்திக் குறைவு, இறக்குமதி குறைவு, நிதிச்சந்தையில் ஏற்படும் பதற்றமான சூழல் ஆகியவை தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சிக் குறைவை ஏற்படுத்துகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தெற்காசியாவில் வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம், இந்தியாவை விட அதிகமாக உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

    தெற்காசிய பொருளாதார நிலை குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘2019-ம் ஆண்டு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இந்த வளர்ச்சி வீதம் 2021-ம் ஆண்டில் 6.9 சதவீதமாகவும், 2022-ல் 7.2 சதவீதமாகவும் வளர்ச்சியடையும். வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் 2019-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவை விட அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலக சூழலின் காரணமாக தெற்காசியா முழுவதுமே இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை இருக்கும். மொத்தமாக தெற்காசியாவின் வளர்ச்சி வீதம் 5.9 சதவீதம் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உலக வங்கியின் தெற்கு ஆசிய மண்டலத்தின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் கூறுகையில், " தொழில்துறை உற்பத்திக் குறைவு, இறக்குமதி குறைவு, நிதிச்சந்தையில் ஏற்படும் பதற்றமான சூழல் ஆகியவை தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சிக் குறைவை ஏற்படுத்துகின்றன.

    உலகளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற சூழலின் தாக்கம் தெற்காசியாவிலும் எதிரொலிக்கிறது. தனியாரின் நுகர்வை அதிகரித்தல், முதலீட்டை வரவழைத்தல் மூலம் வளர்ச்சியை பெருக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: