கொரோனா 2வது அலை 100 நாட்கள் வரை நீடிக்கலாம்: எஸ்.பி.ஐ வங்கி அறிக்கையில் தகவல்

கொரோனா 2வது அலை

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கொரோனாவின் இரண்டாவது அலையை தெளிவாகக் குறிக்கிறது என்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.

  • Share this:
'தொற்றுநோய்களின் இரண்டாவது அலை: முடிவின் ஆரம்பம்?’ என்ற தலைப்பில் எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா 2வது அலை 100 நாட்கள் வரை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுளது.

எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர்.சவும்யா கந்தி கோஷ் தயாரித்துள்ள வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் நாட்டில் பொமுடக்கம் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவில்லை எனவும் வணிக நடவடிக்கை அட்டவணை சமீபத்திய வாரங்களில் 101.7 என்ற சமீபத்திய மதிப்புடன் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கொரோனாவின் இரண்டாவது அலையை தெளிவாகக் குறிக்கிறது என்றும் கொரோனா 2வது அலை 100 நாட்கள் வரை நீடிக்கலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது மட்டுமே வெற்றியைத் தரும். நோய்த்தொற்று பாதிப்புக்கும், தடுப்பூசி செலுத்துவதற்கும் இடையிலான விகிதத்தில் இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் சிலி ஆகியவை இந்தியாவை விட சிறப்பாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் மிக அதிகம். இதுவரை இந்தியா 67 நாட்களில் 50.8 மில்லியன் ஷாட்களை அல்லது ஒரு நாளைக்கு 790,000 ஷாட்களை வழங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து கொரோனாவின் 2ம் அலையை நாடு சந்தித்து வருகிறது. இந்த 2வது அலை 100 நாட்கள் வரை நீடிக்கும். இதில் ஒட்டுமொத்தமாக 25 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் (மார்ச் 23ம் தேதி வரையிலான ட்ரெண்ட் அடிப்படையிலான தரவுகள்). இந்த 2ம் கொரோனா அலையில் உச்சம் ஏப்ரல் 2ம் பாதியில் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என எஸ்.பி.ஐ வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தேதியில் (மார்ச் 25) நாட்டில் 53,476 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,787,534 ஆக உள்ளது.
Published by:Arun
First published: