இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்து பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 241 நாட்களுக்கு பின்னர் அதிகரித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு மெல்ல பரவிய கொரோனா வைரஸ் விரைவிலேயே உலக நாடுகளை தன் பிடியில் கொண்டு வந்து பெருந்தொற்று நோயாக மாறியது. கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய போதிலும், புதிய வகை கொரோனா மாறுபாடுகள் முந்தைய கொரோனா வைரஸை காட்டிலும் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் ஆபத்தான் டெல்டா வகை மாறுபாடு உலக நாடுகள் பலவற்றிலும் உயிரிழப்பை பெருமளவில் ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் முந்தைய வேறுபாடுகளை விட மிக அதிக வேகத்தில் பரவக்கூடியது என கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை தொற்று தற்போது வரையில் 171 நாடுகளில் பரவி புதிய அலை கொரோனா பரவலுக்கு வித்திட்டுள்ளது.
அந்த வகையில், இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆயிரங்களில் இருந்த பாதிப்பு தற்போது லட்சங்களாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவை அடுத்து கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
Also read: கொரோனா முடிவுக்கு வருகிறது - சுகாதார வல்லுநர்கள் ஹேப்பி நியூஸ்
இதுவரை நாட்டில் 3.95 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல 439 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 241 நாட்களுக்கு பின்னர் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய அளவில் 22,49,335 பேர் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
அதே போல நாட்டில் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 17.78%ல் இருந்து 20.75% ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகளவாக கர்நாடகாவில் 50,210 பேரும், மகாராஷ்டிராவில் 40,805 பேரும்., தமிழகத்தில் 30,580 பேரும், டெல்லியில் 9,97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.