இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதித்த கேரள மாணவிக்கு மீண்டும் பாதிப்பு

கொரோனா டெஸ்ட் (Exposure Visuals / Shutterstock.com)

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அப்போது, பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கொரோனா முதல்அலை பாதிப்பு குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. இந்தியாவின் வடமாநிலங்கள் கொரோனா இரண்டாவது அலையில் மிகத்தீவிரமான பாதிப்புகளை எதிர்கொண்டனர்.

    இந்தநிலையில், இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த திருச்சூர் மாவட்ட மருத்து அதிகாரி ரீனா, ‘மருத்துவ மாணவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு செய்யப்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர் சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், ஆன்டிஜென் சோதனையில் நெகடிவ் வந்துள்ளது. அவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. அவர் படிப்புக்கா டெல்லி செல்ல தயாராகியபோது அவருடைய மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு ஆர்.டி. பி.சி.ஆர் சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர், தற்போது வீட்டில் இருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர், சீனாவின் ஊஹான் மாகாணத்தில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார். அவர் விடுமுறைக்கு ஊரில் வந்திருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    Published by:Karthick S
    First published: