ஆப்கானிலுள்ள இந்தியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்குதான் அதிகபட்ச முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் இருந்தன. சமீபத்தில், அமெரிக்க அரசு, தங்கள் படைகளை பின்வாங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அரசை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் அதிகாரம் தாலிபான்களின் கட்டுக்குள் சென்றது உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தீவிர அடக்குமுறை இருக்கும் என்று உலக நாடுகள் அச்சம் கொள்கின்றனர்.

    அதைக் கடந்து ஆப்கானிஸ்தானில் இருந்த தூதரகங்களை உலக நாடுகள் மூடியுள்ளன. இந்தியாவும், ஆப்கானிஸ்தானிலிருந்த நம்முடைய தூதரகத்தை மூடியுள்ளது. முந்தைய ஆப்கானிஸ்தான் அரசுடன் இந்தியா இருந்த நிலையில் தாலிபான்கள் அந்த இணக்கம் தொடர்வது கேள்விக்குறியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தாலிபான் தடை செய்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் மற்ற நாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்புவதற்காக காபூல் விமான நிலையத்தை மட்டும் கட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கப் படைகள் விரைவில் தாலிபான்களிடம் ஒப்படைக்க உள்ளனர். அதனால், ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டிஆர் பாலு, என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார், அப்னா தளம் கட்சி சார்பில் அனுப் பிரியா, ஹெச்டி தேவேகவுடா, உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அ ரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘ஆப்கனிலிருந்து இந்தியர்கள் அனைவரையும் முழுமையாக விரைவில் வெளியேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பாக ஏதாவது சர்வதேச அளவில் முடிவுகள் ஏதும் எடுக்கப்பட்டால், அதில் இந்தியாவின் பங்கு அங்கீகரி்க்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அடுத்துவரும் நாட்களில் இதுபோன்று பல கூட்டங்கள் நடத்தப்பட்டு நிலவரம் தெரிவிக்கப்படும். ஆப்ரேஷன் தேவி சக்தி மூலம் 6 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான இந்தியர்களை அழைத்துவிட்டோம், சிலருக்கு விமானம் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரையும் தாயகத்துக்கு பாதுகாப்பாக அழைத்துவர முயற்சிப்போம். ஆப்கன் மக்கள் சிலரையும் மீட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: