சமூக வலைதளங்களில் மிந்த்ராவுக்கு எதிராக திடீர் முழக்கம்: காரணம் என்ன?

சர்ச்சை விளம்பரம்

இந்த விளம்பரத்தை தாங்கள் உருவாக்கவில்லை என்றும் இதனை ஆதரிக்கவில்லை என்றும் மிந்த்ரா தரப்பில் அப்போதே விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் இதனை மையப்படுத்தி மிந்த்ராவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

 • Share this:
  பிரபல ஆன்லைன் விற்பனை தளமான மிந்த்ராவை புறக்கணிப்போம் என ட்விட்டரில் பலரும் டிரண்ட் செய்து வருகின்றனர்.

  இந்தியாவில் பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒன்றாக மிந்த்ரா உள்ளது. இந்த ஆன்லைன் தளம் மூலம்  உடைகள்,காலணிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் டிவிட்டர் சமூக வலைதளத்தில்  #BoycottMyntra  மற்றும் #UninstallMyntra போன்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மிந்த்ரா வலைதளத்திற்கு எதிராக பலமுறை எதிர்ப்பு குரல் எழுந்துள்ள நிலையில் இம்முறையும் உண்மையில்லாத குற்றச்சாட்டை மையப்படுத்தி  மிந்த்ராவுக்கு எதிராக அவதூறுகள் கிளம்பியுள்ளன. இந்து மதத்தை அவமதித்ததாக கடந்த 2016ம் ஆண்டு மிந்த்ராவுக்கு எதிராக பரப்பப்பட்ட அவதூறு மீண்டும் கிளம்பியுள்ளது.

  இதையும் படிங்க: கொரோனா மூன்றாம் அலை அக்டோபரில் உச்சம் தொடும்... பிரதமர் அலுவலகத்தில் நிபுணர்கள் அறிக்கை


  ஸ்க்ரோல் ட்ரோல் என்னும் ஏஜென்சி மிந்த்ராவுக்கு  செய்த விளம்பரத்தில், மகாபாரதத்தின் ஒருகாட்சியை பயன்படுத்தி இருந்தது. பாஞ்சாலி  துயில் உரிக்கப்படும்போது கிருஷ்ணன் மிந்த்ரா தளத்தில் ஆடைகளை தேடுவது போன்ற இந்த விளம்பரத்துக்கு 2016லேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இந்த விளம்பரத்தை தாங்கள் உருவாக்கவில்லை என்றும் இதனை ஆதரிக்கவில்லை என்றும் மிந்த்ரா தரப்பில் அப்போதே விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல்,இந்த விளம்பரத்தை உருவாக்கிய ஸ்க்ரோல் ட்ரோல் ஏஜென்சியும் விளம்பரத்துக்கும் மிந்த்ராவுக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளித்தது.

  இந்நிலையில், தற்போது இந்த விளம்பரம் மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது. இந்து மதத்தை மிந்த்ரா தளம் அவமதித்துவிட்டது என்றும் மிந்த்ராவை புறக்கணிக்க வேண்டும் என்றும் பலரும் பதிவிட்டு வருகிறது.  இந்த அவதூறுகளுக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு மிந்த்ரா அளித்த விளக்கத்தை சிலர் ரீ டிவிட் செய்து வருகின்றனர்.

  மேலும் படிக்க: ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

  Published by:Murugesh M
  First published: