இந்தியர்கள் 2022ஆம் ஆண்டு ஒரு நிமிடத்திற்கு 137 சிக்கன் பிரியாணிகளை ஸ்விகியில் ஆர்டர் செய்துள்ளனர்.
அசைவ உணவு என்றாலே பிரியாணியை தேர்வு செய்யும் அளவுக்கு இந்தியர்கள் பலரும் பிரியாணி காதலர்களாக இருக்கின்றனர். தேடித் தேடி பிரியாணியை ருசித்தவர்களுக்கு சில ஆண்டுகளாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடுகிறார்கள். இதற்காகவே ஸ்விகி, சொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் ஆப்களும் உள்ளன. ஆன்லைனில் பல தரப்பட்ட உணவுகளை ஆர்டர் செய்யலாம் என்றாலும் இந்தியர்களின் பேவரிட் சாய்ஸாக இருப்பது என்னவோ பிரியாணிதான்.
இந்த நிலையில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஸ்விகி தனது வருடாந்திர ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்த வருடம் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் எப்போதும் போல பிரியாணியே முதலிடம் பிடித்துள்ளது. அந்த அறிக்கையில், “அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகையில் சிக்கன் பிரியாணியே 7வது வருடமாக முதலிடத்தில் உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஒரு நொடிக்கு 2.28 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க; ஹோட்டல் சுவையில் பிரியாணி செய்ய சில டிப்ஸ்
சிக்கன் பிரியாணியை போலவே சிக்கன் ப்ரைடு ரைஸ், மசாலா தோசை, பன்னீர் பட்டர் மசாலா மற்றும் பட்டர் நான் ஆகியவையும் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் இடம்பிடித்துள்ளன. இதேபோல வெளிநாட்டு உணவு வகைகளான பீட்சா, இத்தாலியன் பாஸ்தா, மெக்சிகன் பவுல் உள்ளிட்டவற்றையும் இந்திய உணவுப் பிரியர்களின் பேவரிட் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
இரவு 10 மணிக்கு மேல் 22 லட்சம் பாப்கார்ன்களை ஆர்டர் செய்துள்ளனர். அத்துடன், குலோப் ஜாமுன் 27 லட்சமும், சமோசா 40 லட்சம் முறையும் ஆர்டர்கள் செய்து சாப்பிட்டுள்ளனர் இந்தியர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Swiggy