ராமரை சொந்தம் கொண்டாடும் நேபாளம் - பாஜக ரியாக்‌ஷன் என்ன...?

ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தில் தான் இருப்பதாகவும், ராமர் இந்தியரே அல்ல என்றும் அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமரை சொந்தம் கொண்டாடும் நேபாளம் - பாஜக ரியாக்‌ஷன் என்ன...?
பிரதமர் சர்மா ஒலி
  • Share this:
ராமர் கோயில் வழக்கு இந்தியாவில் சுமூகமாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ராமர் பெயரில் மற்றொரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி.

இந்தியா - நேபாளம் இடையே உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளை, தங்களது நாட்டின் வரைபடத்துடன் இணைத்து, முதலில் இந்தியாவுடன் மோதல் போக்கைத் தொடங்கிய அந்நாட்டு பிரதமர், பின்னர் இந்தியாவின் தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அந்நாட்டில் தடை விதித்தார்.

இந்தநிலையில் தற்போது ராமர் இந்தியரே அல்ல எனக்கூறி, பண்பாடு மற்றும் கலாசார ரீதியிலும் இந்தியாவுடன் மோதத் தொடங்கியுள்ளார்.


வால்மிகி ராமாயணத்தை நேபாளத்தில் மொழி பெயர்த்த கவிஞர் பானுபகத்தாவின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்மா ஒலி, கலாச்சார ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருப்பதாகவும், தங்களது நாட்டின் வரலாற்று தரவுகளை இந்தியா திரித்துக் கூறியுள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.

இந்திய இளவரசருக்கு நாம் சீதையை மணமுடித்துக் கொடுத்ததாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால்,  அயோத்தியை சேர்ந்த இளவரசனுக்கு தான் சீதையை கொடுத்ததோமே தவிர இந்தியாவுக்கு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

Also read... கொரோனா தொற்று எண்ணிக்கையில் பொய்க் கணக்கா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்நேபாளத்தின் பிர்குன்ஜ் என்ற இடத்துக்கு மேற்கே தான் அயோத்தி என்ற சிறுகிராமம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி பிற்கால இந்தியர்களால் உருவாக்கப்பட்டது எனவும், அது பண்டைய ராமர் ஆட்சி செய்த நகரமில்லை எனவும் கூறியிருக்கிறார்.
படிக்க: BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

படிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்
நேபாள பிரதமரின் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் பிஜய் சோன்கர் சாஸ்திரி, மக்களின் நம்பிக்கைகளுடன் இந்திய கம்யூனிஸ்டுகள் விளையாடுவது போல், நேபாள கம்யூனிஸ்டுகளும் விளையாடுவதாக விமர்சித்திருக்கிறார்.

அதேபோல இந்து மத தலைவர்களும், ராமர் கோயில் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் நேபாள பிரதமரின் கருத்துக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading