Home /News /national /

போரை தொடங்குவதில் ரஷ்யா பிடிவாதம்... இந்திய தூதரக பணியாளர்கள் குடும்பத்தினருடன் நாடு திரும்புகின்றனர்..

போரை தொடங்குவதில் ரஷ்யா பிடிவாதம்... இந்திய தூதரக பணியாளர்கள் குடும்பத்தினருடன் நாடு திரும்புகின்றனர்..

Russia - Ukraine Crisis: அமெரிக்கா அளித்துள்ள தகவலின்படி உக்ரைன் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படைகளை ரஷ்யா குவித்து வைத்திருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரை தடுப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் படிக்கவும் ...
    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் அபாயம் உள்ளதால் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்தியா திரும்புமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்யாவை சமாதானப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தோல்வி அடைந்து வரும் நிலையில் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று இந்திய தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோரும் இந்தியா அனுப்பப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்பாக இதுவரை 2 எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதல் எச்சரிக்கையில், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. தற்போதைய எச்சரிக்கையில் தூதரக பணியாளர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    இதையும் படிங்க - பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு கொரோனா பாதிப்பு... மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

    உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'உக்ரைன் நாட்டில் பதற்றமான சூழல், நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்காக தனி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பான அப்டேட்டுகளை தூதரகத்துடைய பேஸ்புக், ட்விட்டர், இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    இதையும் படிங்க - மிகப்பெரிய போருக்கு ரஷ்யா திட்டமிட்டு வருகிறது: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் விமர்சனம்

    மத்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டும் உக்ரைனில் இந்தியர்கள் தொடர்பான தகவல்கள், அவர்களுக்கான உதவிகள், விமானப் போக்குவரத்து டிக்கெட்டுகள் உள்ளிட்ட விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா அளித்துள்ள தகவலின்படி உக்ரைன் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படைகளை ரஷ்யா குவித்து வைத்திருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரை தடுப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    நேற்றிரவு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினுடன் 105 நிமிடங்கள் பேசினார். இதில், உக்ரைன் உடனான பிரச்னையை சுமுகமாக முடித்துக் கொள்வதற்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இது தொடர்பாக ரஷ்யா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே எதையும் உறுதி செய்யும் சூழல் நிலவுகிறது.

    பிரான்ஸ் அதிபர் உடனான பேச்சுவார்தையின்போது, நேட்டோ படைகள் கிழக்கு ஐரோப்பாவில் படைகளை குவிக்கக் கூடாது என்று புதின் வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Russia

    அடுத்த செய்தி