இந்தியா பாகிஸ்தானில் ட்ரென்டாகும் #SayNoToWar ஹேஷ்டேக்!

இரு நாட்டு மக்களும் #SayNotoWar என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

இந்தியா பாகிஸ்தானில் ட்ரென்டாகும் #SayNoToWar ஹேஷ்டேக்!
இரு நாட்டு மக்களும் #SayNotoWar என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தி வருகின்றனர்.
  • News18
  • Last Updated: February 27, 2019, 3:18 PM IST
  • Share this:
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாட்டு மக்களும் சமூக வலைதளங்களில் “போர் வேண்டாம். அமைதி வேண்டும்” எனக் குறிப்பிட்டு தங்களது வேண்டுகோளை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் பகுதியில் உள்ள ஜய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானும் இன்று அதிகாலை இந்திய எல்லைப் பகுதியில் குண்டு வீசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கு மத்தியிலும் போர் பதற்றம் அதிகரித்துக் காணப்படும் சூழலில் உலக நாடுகள் பலவும் இரு நாடுகளையும் அமைதி காக்க வலியுறுத்தி வருகின்றனர். அதே வேளையில் இரு நாட்டு மக்களும் போருக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


இரு நாட்டு மக்களும் #SayNotoWar என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தி வருகின்றனர். போர் ஒரு நாளும் அமைதி தராது என்றும் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் இரு நாட்டு மக்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Live Updates: இந்தியா -  பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க

மேலும் பார்க்க: துல்லிய தாக்குதல் நடத்திய மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்!
First published: February 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading