ஹோம் /நியூஸ் /இந்தியா /

மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் விவகாரம் : விசாரிக்க மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் விவகாரம் : விசாரிக்க மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள்

indian wrestler protest | ஒரு மாதத்தில் இக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை கண்டித்து மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அனுராக் தாக்கூர் கூறினார். ஒரு மாதத்தில் இக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்று அவர் தெரிவித்தார். அதுவரை இக்குழுவே இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

First published:

Tags: Mary Kom, Wrestlers