ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்திய உணவு முதல் இத்தாலிய வெரைட்டிகள் வரை - பஞ்சாப் முதல்வரின் திருமண விழா உணவு பட்டியல்!

இந்திய உணவு முதல் இத்தாலிய வெரைட்டிகள் வரை - பஞ்சாப் முதல்வரின் திருமண விழா உணவு பட்டியல்!

பகவந்த் மான் திருமணம்

பகவந்த் மான் திருமணம்

இனிப்பு வகைகளில் பாசிபருப்பு அல்வா, சாஹி துக்ரா, உலர் பழ அங்கூரி, ரசமலாய் மற்றும் பல இனிப்புகள் வழங்கப்பட்டன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த மாநிலத்தில் உள்ள தனியார் அரங்கில் திருமணம் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

பொதுவாகவே இந்திய கலாச்சாரத்தில் நடைபெறும் திருமணங்களில் பிரம்மாண்டங்களுக்கு பஞ்சமிருக்காது. குறிப்பாக, அறுசுவை விருந்து தவறாமல் இடம்பிடித்து விடும். இந்த திருமணமும் அந்த விஷயங்களை பூர்த்தி செய்திருந்தது. பல வகையான உணவுகள் திருமண விருந்தில் இடம்பிடித்தன. குறிப்பாக, இந்திய வகை உணவுகள் மற்றும் இத்தாலிய வகை உணவுகளில் மிக சிறப்பான வெரைட்டிகள் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டன.

என்னென்ன வெரைட்டிகள்?

உணவு வெரைட்டிகளில் சாலட் மற்றும் டெசர்ட் வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, சாலட் வகையில் 6 வகைகள் இடம்பெற்றிருந்தன. இதேபோல, கராஹி பன்னீர், வெஜிடபிள் ஜால்பிரெஸி, சன்னா மசாலா, தந்தூரி குல்சே, தால் மக்கானி மற்றும் நவரதன் பிரியாணி உள்ளிட்ட உணவுகள் இடம்பெற்றிருந்தன.

இனிப்பு வகைகளில் பாசிபருப்பு அல்வா, சாஹி துக்ரா, உலர் பழ அங்கூரி, ரசமலாய் மற்றும் பல இனிப்புகள் வழங்கப்பட்டன.

தந்தை ஸ்தானத்தில் வாழ்த்திய கெஜ்ரிவால்

திருமண விழாவில் மணமகன் பகவந்த் மானுக்கு, ஒரு தந்தை செய்யக் கூடிய அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களையும் கெஜ்ரிவால் செய்து வைத்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, திருமண விழாவிற்காக மொஹாலி நகருக்கு வருகை தந்த அவர், மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், “பகவந்த் மான் இன்றைக்கு புதிய பயணத்தை தொடங்குகிறார். அவரது திருமண வாழ்க்கை இனிமையானதாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்’’ என்றார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தற்போது கரம் பிடித்திருக்கும் குருப்ரீத் கௌர் ஒரு மருத்துவர் ஆவார். பகவந்துக்கு 48 வயது ஆகிறது. தற்போது 29 வயது நிரம்பியுள்ள மணமகள் குருப்ரீத் கௌர், கடந்த 2018ஆம் ஆண்டில் ஹரியாணா மாநிலத்தில் உள்ள மகரிஷி மார்க்கண்டேஸ்வரர் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை முடித்தவர்.

இதையும் படிங்க: இரு மகள்களுடன் பொதுத்தேர்வு எழுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அசத்திய தாய்

பகவந்த் மான் திருமண விழாவில் அவரது தயார், சகோதரி மற்றும் பல உறவினர்கள் கலந்து கொண்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது குடும்பத்தினரோடு வந்து கலந்து கொண்டார்.

முன்னதாக, பகவந்த் மான் தனது முதல் மனைவியை கடந்த 2015ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார். அவருக்கு சீரத் கௌர் மான் என்ற மகளும், தில்ஷன் சிங் மான் என்ற மகனும் உள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றபோது குழந்தைகள் இருவரும் விழாவில் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Arvind Kejriwal, Marriage, Punjab