முகப்பு /செய்தி /இந்தியா / 6 ஆண்டில் 30 லட்சம் பேர்... வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 69 சதவீதம் உயர்வு

6 ஆண்டில் 30 லட்சம் பேர்... வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 69 சதவீதம் உயர்வு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் உறுப்பினர் ஒருவர் வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய கல்வி அமைச்சக இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் விரிவான புள்ளி விவரங்களுடன் பதில் அளித்தார்.

அதன்படி, கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு உயர் கல்விக்காக சென்றுள்ளனர். ஆண்டுவாரியான புள்ளி விவரத்தை பார்க்கையில், 2017இல் 4,54,009 மாணவர்ககள், 2018இல் 5,17,998 மாணவர்கள், 2019இல் 5,86,337 மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட 2020இல் அதற்கு முந்தைய ஆண்டை விட எண்ணிக்கை பாதியாக குறைந்தது. 2020இல் 2,59,655 மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்க சென்றுள்ளனர். 2021இல் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து 4,44,553ஆக உள்ளது. கடந்தாண்டில் மட்டும் 7,50,365 மாணவர்கள் வெளிநாட்டிற்கு கல்விக்காக சென்றுள்ளனர். 2021ஐ ஒப்பிடுகையில் 2022இல் வெளிநாடு சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 69 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக செல்லும் டாப் 10 நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனி, வங்கதேசம், கிர்கிஸ்தான், ஆஸ்திரேலியா, கசகஸ்தான் ஆகியவை உள்ளதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் எண்ணிக்கை வரும் காலங்களில் தொடர்ந்து உயரும் என பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Abroad, Education, Higher education, Parliament, Parliament Session, Study in Abroad