• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமர் மோடிக்கு விளையாட்டு வீராங்கனைகள் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு விளையாட்டு வீராங்கனைகள் பிறந்தநாள் வாழ்த்து

மோடி

மோடி

பிரதமர் நரேந்திர மோடிக்கு விளையாட்டுத்துறை வீரர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 71-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை பா.ஜ.கவினர் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.

    பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் சார். நீங்கள் தனித்துவமான பண்புகளுடன் பிறப்பிலேயே தலைவராக பிறந்தவர். பலருக்கு முன்னுதாரணமாக இருப்பதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மிராபாய் சானு பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘நம்முடைய பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நம்நாட்டின் மீதான உங்களுடைய அர்பணிப்பும், கண்ணோட்டமும் எங்களை உத்வேகப்படுத்துகிறது. உங்களுடைய நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்னுடைய வேண்டுதல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.






    டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடந்த பல வருடங்களாக உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. சில தருணங்கள் உங்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் இந்திய தடகள வீரர்களுக்கு ஆதரவாக உள்ளீர்கள். உங்களுடைய ஆரோக்கியான வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தடகள வீராங்கனை ஸ்வப்னா பார்மன் ட்விட்டர் பதிவில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: