முகப்பு /செய்தி /இந்தியா / இயந்திர சேதத்தை சுயமாக தானே சரி செய்து கொள்ளும் மெட்டீரியலை கண்டறிந்துள்ள இந்திய விஞ்ஞானிகள்.!

இயந்திர சேதத்தை சுயமாக தானே சரி செய்து கொள்ளும் மெட்டீரியலை கண்டறிந்துள்ள இந்திய விஞ்ஞானிகள்.!

இயந்திர சேதத்தை சுயமாக தானே சரி செய்து கொள்ளும் மெட்டீரியல்

இயந்திர சேதத்தை சுயமாக தானே சரி செய்து கொள்ளும் மெட்டீரியல்

ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ள இந்த கிறிஸ்டல்கள் பைபிரசோல் ஆர்கானிக் கிறிஸ்டல்கள் (bipyrazole organic crystals) என்று அழைக்கிறார்கள்.

  • Last Updated :

கொல்கத்தாவின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Institute of Science Education and Research) விஞ்ஞானிகள், ஐ.ஐ.டி கரக்பூருடன் (IIT Kharagpur) இணைந்து தன்னை தானே ரிப்பேர் செய்து கொள்ளும் மெட்டீரியல் பொருளை உருவாக்கி உள்ளனர்.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology - DST) ஐ.ஐ.டி காரக்பூருடன் இணைந்து கொல்கத்தாவின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் செல்ஃப் ரிப்பேரிங் பைசோ எலக்ட்ரிக் மாலிகுலர் கிறிஸ்டல்களை (self-repairing piezoelectric molecular crystals.) உருவாக்கியுள்ளதாக கூறி உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ள இந்த கிறிஸ்டல்கள் பைபிரசோல் ஆர்கானிக் கிறிஸ்டல்கள் (bipyrazole organic crystals) என்று அழைக்கிறார்கள். இந்த சுய பழுதுபார்க்கும் மெட்டீரியல் இயந்திர சேதம் காரணமாக எளிதில் உடைந்துபோகும் சாதனங்களில் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய மெட்டீரியல் சேதமடைந்து விட்டால் வெளிப்புற தலையீடு இல்லாமல் தனத்தை தானே சுயமாக சேதத்தை சரி செய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது. பைசோ எலக்ட்ரிக் கிறிஸ்டல்கள் என்பது ஒரு இயந்திர தாக்கத்திற்கு உள்ளாகும்போது மின்சாரத்தை உருவாக்கும் பொருட்களின் ஒரு வகையாகும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில டிவைஸ்கள் ஒரு கட்டத்தில் மெக்கானிக்கல் டேமேஜ் காரணமாக பெரும்பாலும் உடைந்து விடுகிறது. இதனால் சேதமடைந்த டிவைஸ்களை மக்கள் ரிப்பேர் செய்யவோ அல்லது மாற்றவோ நேரிடுகிறது. இது சாதனங்களின் ஆயுளை குறைக்கிறது மற்றும் பராமரிப்பு செலவுகளை அதிகரிக்க செய்கிறது.

இத்தகைய விஷயங்களை மனதில் கொண்டு இந்திய ஆராய்ச்சியாளர்களால் மெக்கானிக்கல் டேமேஜை தன்னை தானே சரி செய்து கொள்ளக்கூடிய வகையில் பைசோ எலக்ட்ரிக் மாலிகுலர் கிறிஸ்டல்களை (piezoelectric molecular crystals) உருவாக்கியுள்ளனர்” இத்தூய தொடர்பான அறிக்கையில் DST குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "பைபிரசோல் ஆர்கானிக் கிறிஸ்டல்ஸ் என்று அழைக்கப்படும், விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள பைசோ எலக்ட்ரிக் மாலிகியூல்கள், குறிப்பிட்ட டிவைஸ்களில் மெக்கானிக்கல் டேமேஜ் அல்லது mechanical fracture ஏற்பட்டு ரிப்பேரான பிறகு, எந்தவொரு வெளிப்புறத் தலையீடுமின்றி ஆட்டோமேட்டிக்காக மீண்டும் ஒன்றிணையும். இந்த மெட்டீரியலில் உள்ள பைசோ எலக்ட்ரிக் மாலிகுலர் கிறிஸ்டல்கள் இயந்திர அழுத்தத்தால் உடைந்து மீண்டும் இணைகின்றன. இந்த மெட்டீரியலானது பாதிக்கபடும் போது எலெக்ட்ரிக் சார்ஜை டெவலப் செய்கிறது.

இதன் விளைவாக உடைந்த பீஸ்களில் எலெக்ட்ரிபிகேஷன் ஏற்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட டிவைஸ்களின் விரிசல்களின் விளிம்புகள் அல்லது ஜங்க்ஷன்களில் எலெக்ட்ரிக் சார்ஜ் குவிகிறது. இந்த எலெக்ட்ரிக் சார்ஜ் மூலக்கூறுகளின் (molecules) ஈர்ப்புக்கு வழிவகுக்கிறது. சிதறிய மூலக்கூறுகள் இதனால் மீண்டும் ஒன்றிணைகின்றன.

இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள இந்த மெட்டீரியல் மில்லி வினாடிக்குள் தன்னியக்க பழுதுபார்க்கும் திறன் (Capable Of Autonomous Repairs) கொண்டது. இந்த மெட்டீரியல் ஹை-என்ட்-மைக்ரோசிப்ஸ், ஹை பிரிஸிஸிஷன் மெக்கானிக்கல் சென்சார், மைக்ரோ-ரோபோடிக்ஸ் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படலாம். இதுபோன்ற மெட்டீரியல் பற்றிய கூடுதல் ஆராய்ச்சி இறுதியில் விரிசல்கள் அல்லது கீறல்கள் ஏற்பட்டால் தன்னை தனேசரி செய்து கொள்ளும் ஸ்மார்ட் கேஜெட்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Scientist