சேவல் சண்டையில் விபரீதம்: வளர்த்தவரையே பலிவாங்கிய சேவல்!

சேவல் சண்டையில் விபரீதம்: வளர்த்தவரையே பலிவாங்கிய சேவல்!

சேவல் சண்டை

தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, கிடா சண்டை, சேவல் சண்டை போன்றவை பிரசித்தமாகும். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களிலும் சேவை சண்டை, கிடா சண்டை போன்றவை பிரசித்தம்.

  • Share this:
சட்டவிரோதமாக நடத்தப்பட்ட சேவல் சண்டையின் போது எதிர்பாராத விதமாக சேவலின் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, கிடா சண்டை, சேவல் சண்டை போன்றவை பிரசித்தமாகும். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களிலும் சேவை சண்டை, கிடா சண்டை போன்றவை பிரசித்தம். திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நாட்களில் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் விலங்குகளுக்கு துன்புறுத்துதல் ஏற்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் மனித ஆர்வலர்கள் இது போன்ற போட்டிகள் நடத்தக்கூடாது என்று தடை கோரி நீதிமன்றங்களில் முறையிட்டனர்.

பாரம்பரிய அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் ஒரு கட்டத்தில் தடை விதிக்கப்பட்டு போட்டிகள் தடைபட்ட நிலையில் பல கட்ட போராட்டங்கள் காரணமாக மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இருப்பினும் சேவல் சண்டை, கிடா சண்டை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக இது போன்ற போட்டிகள் ஆங்காங்கு நடந்து கொண்டு தான் உள்ளன.

அந்த வகையில் தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள லோத்தனுர் என்ற கிராமத்தில் இன்று சேவை சண்டை விடுவதில் 16 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த ஒரு சேவல் சண்டையின் போது மிரண்டு போன சேவல் ஒன்று தப்பிப்பதற்காக பறந்த போது அதன் காலில் கட்டியிருந்த கத்தி சேவலின் உரிமையாளரின் இடுப்பை பதம் பார்த்தது. தீவிரமான ரத்தப் போக்குடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் அந்த கிராமத்தில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருப்போரை தேடி வருகின்றனர். மேலும் சேவல்களை பறிமுத செய்து கோழிப் பண்ணையில் விட்டனர்.

சேவல் சண்டைக்காகவே பிரத்யேகமாக சேவல்கள் வளர்க்கப்பட்டு தயார் செய்யப்படுகின்றன. இது போன்ற சேவல்களின் கால்களில் 7.5 செ.மீ நீளம் கொண்ட கத்திகளை கட்டி எதிராளியின் சேவல் கொல்லப்படும் வரை சண்டையிட செய்கின்றனர். இதற்காக சேவல்களின் மீது பணம் வைத்து சூதாடுகின்றனர். இது போன்ற சண்டைகளில் ஒரு ஆண்டில் ஆயிரக்கணக்கான சேவல்கள் உயிரிழப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Published by:Arun
First published: