ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில் வசதிகளை அதிகரிக்க, பயணிகளிடம் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க ரயில்வே வாரியம் முடிவு..

ரயில் வசதிகளை அதிகரிக்க, பயணிகளிடம் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க ரயில்வே வாரியம் முடிவு..

ரயில் (கோப்புப்படம்)

ரயில் (கோப்புப்படம்)

ரயில் நிலையங்களில் பயணிகளிடமிருந்து பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்க ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான நிதி ஆதாரத்தை திரட்டுவதற்காக குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளிடம் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருப்பதாக ரயில்வே வாரிய தலைமை செயல் அதிகாரி விக்ரம் யாதவ் தெரிவித்துள்ளார்.

  தற்போது பயணிகளுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டு வரும் ரயில் நிலையங்கள் மற்றும் வசதிகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் இந்த பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகவும் பயன்பாட்டுக் கட்டணத்தால் பயணிகளுக்கு பெரும் சுமை இருக்காது என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க...முக்கிய முடிவுகள் எதிர்பார்க்கப்படும் அதிமுக உயர்மட்டக் குழு இன்று கூடுகிறது..

  எனினும் இந்த பயன்பாட்டுக் கட்டணம் பயணிகளை பாதிக்காத வகையில் சொற்பமான தொகையே நிர்ணயிக்கப்படும் என்றும் இந்தியாவில் மொத்தம் உள்ள ஏழாயிரம் ரயில் நிலையங்களில் 15 சதவீத நிலையங்களில் மட்டுமே இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Indian Railways