ஹோம் /நியூஸ் /இந்தியா /

பயணிகள் இனி விரும்பிய உணவை ஆர்டர் செய்யலாம் - இந்திய ரயில்வேயில் புதிய சேவை அறிமுகம்

பயணிகள் இனி விரும்பிய உணவை ஆர்டர் செய்யலாம் - இந்திய ரயில்வேயில் புதிய சேவை அறிமுகம்

விரும்பிய உணவை தேர்தவு இந்திய ரயில்வே புதிய வசதி அறிமுகம்

விரும்பிய உணவை தேர்தவு இந்திய ரயில்வே புதிய வசதி அறிமுகம்

சப்பாத்தி, இட்லி, பிரியானி போன்ற குறிப்பிட்ட வகை உணவுகளையும் தாண்டி, உள்ளூரில் புகழ்பெற்ற உணவு வகைகள், பண்டிகைகால உணவு வகைகள் போன்றவற்றை வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை மேம்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு உணவு விஷயத்தில் முக்கிய மாற்றத்தை இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ளது.

  இந்திய ரயில்வேயின் உணவு, தங்கும் வசதி, டிக்கெட் புக்கிங் போன்றவற்றை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நடைமுறையில் ரயில் பயணிகளுக்கு குறிப்பிட்ட வகை உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இனி சப்பாத்தி, இட்லி, பிரியானி போன்ற குறிப்பிட்ட வகை உணவுகளையும் தாண்டி, உள்ளூரில் புகழ்பெற்ற உணவு வகைகள், பண்டிகைகால உணவு வகைகள் போன்றவற்றை வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

  அதன்படி, இனி ரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவுகளை ஐஆர்சிடிசி மூலமாக ஆர்டர் செய்யலாம். குழந்தைகள், சர்க்கரை நோயாளிகளுக்கு என பல்வேறு பிரத்யேகதொகுப்பு உணவுகளையும்  புக்கிங் மூலம் பெறலாம். சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, சிறு தானிய அடிப்படையிலான உள்ளூர் தயாரிப்புகள் உள்ளிட்ட ஆரோக்கியம் சார்ந்த உணவு என பயணிகள் தாங்கள் விரும்பிய உணவுகளை தேர்வு செய்யலாம்.

  இதையும் படிங்க: கூகுளையே மிரள வைக்கும் ரெஸ்யூம் இது தான்! - வைரலாகும் லிங்கிடு இன் போஸ்ட்

  சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில் பயணிகளுக்கான கட்டணத்தில் உணவுக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், முன்கூட்டியே உணவுக்கான கட்டணம் செலுத்தியும் பெறலாம்.மேலும், இந்த உணவு தரமானதாக இருக்க வேண்டும், விலைக்கேற்ப உரிய அளவில் உணவு வழங்கப்பட வேண்டும்  என ஐஆர்சிடியிடம் இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Food, Indian Railways