நமது நாட்டில் வந்தே பாரத் என பெயரிடப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய, அதி வேக ரயிலை இந்திய பிரதமர் மோடி ஒவ்வொரு ஊரிலும் துவக்கி வைத்து வருகிறார். அதன்படி இந்தியாவின் ஐந்தாவது வந்தே பாரத் ரயிலானது தென்னிந்தியாவில் இயங்க அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது முதலில், சென்னையிலிருந்து பெங்களூரு வரை இயக்கப்பட உள்ளது.
இதற்கு முன்னர், சில நாட்களுக்கு முன்பு நான்காவது வந்தே வாரத் இரயில் உணா - டெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டது.
தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்பட உள்ள இந்த வந்தே பாரத் ரயில், இந்தியாவின் ஐந்தாவது ரயில் என்பதும், தென்னிந்தியாவில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் என்பதும் குறிப்பிடத்தக்கது.வரும் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வழித்தடத்தில் இந்த ரயில் தனது முதல் பயணத்தை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 483 கிலோ மீட்டர் பயண தூரத்தை கடந்து செல்லும். நாட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வந்தே பாரத் ரயில்கள் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. அந்த வரிசையில் ஐந்தாவது ரயிலாக சென்னை-பெங்களூர் வந்தே மாதரம் ரயில் இருக்கும். மேலும் அடுத்த வருடம் கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் வர இருப்பதால் அதற்கான யுக்தியாக கூட இது இருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.
கடந்த வியாழக்கிழமை உணா மாவட்டத்தின் இமாச்சல் பிரதேசத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இது உணா மாவட்டத்தில் துவங்கி சண்டிகர் வழியாக டெல்லியை அடையும். மேலும் நவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் 2.0 என பெயரிடப்பட்ட ரயிலில் டிசிஏஎஸ் எனப்படும் “ட்ரெயின் கொல்லிஷன் சிஸ்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read : தினம் தினம் பிரச்னை! நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்! அவதிக்குள்ளான பயணிகள்!
இதனை “கவச்” என்றும் அழைக்கிறார்கள், அதாவது கவசம். ஆபத்து நேரங்களில் மின் விளக்குகள் தொடர்ந்து மூன்று மணி நேரம் வரை எறிவதற்கு தேவையான பேட்டரியும் ரயில் பெட்டிகளின் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலின் வெளிப்புறத்தில் மட்டும் எட்டு பிளாட்பார்ம் சைடு கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் மேல் புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. ஆபத்து நேரங்களில் ரயிலில் இருக்கும் பயணிகளும் அந்த ரயிலில் உள்ள காவலர்களும் ஒருவருக்கொருவர் உடனடியாக தொடர்பு கொள்ளும் பொருட்டு வாய்ஸ் ரெக்கார்டிங் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர்த்து சரக்குகளை ஏற்றி செல்வதற்காகவே புதிய அதிவேக ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதன் மூலம் வருமானம் அதிகரிப்பதுடன் சரியான நேரத்திற்கு சரக்குகளை கொண்டு சேர்க்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : வந்தே பாரத் ரயிலின் அடுத்த வெர்ஷன் -ஆனால், பயணிகளுக்கு இல்லையாம்!
தற்போது சரக்குகளை ஏற்றிக்கொண்டு விரைவாக டெலிவரி செய்வதில் பல்வேறு விதமான போக்குவரத்து முறைகள் கடைபிடிக்கப்பட்டாலும், அதிவேக ரயில்களில் இதனை செய்வது புது முயற்சியாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. 120 லிருந்து 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலில் சரக்கு ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தும் பொழுது மிக விரைவாக சரக்குகளை கொண்டு சேர்த்து விடலாம் என்று தெரிகிறது.
இதைப் பற்றி மேலும் விசாரித்த பொழுது வந்தே பாரத் ரயிலில் சரக்குகள் ஏற்றி செல்வது முதலில் டெல்லி டு மும்பை வழித்தடத்தில் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கான ஆரம்ப கால நடவடிக்கைகள் இன்னும் மூன்று வாரத்திற்கும் செய்து முடிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Chennai, South India, Tamil News, Vande Bharat