இந்தியாவில் அதிவேக ரயிலான புல்லட் ரயில் சேவை என்ற கனவு திட்டத்தின் பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஓராண்டு காலத்தில் வந்தே பாரத் ரயில்களின் சேவை எண்ணிக்கையை ரயில்வே அமைச்சகம் கணிசமாக உயர்த்தி வருகின்றன. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலான வந்தே பாரத் திட்டம் ரயில்வே வரலாற்றில் ஒரு மைல்கல் என அரசு கூறி வருகிறது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்களின் டிசைன்களில் புதிய மாற்றத்தை கொண்டுவந்து அலுமினியத்தில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ICF பொது மேலாளர் பிஜி மல்லையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த அலுமினியத்தால் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் இதுவரை தயாரிக்கப்பட்ட ஸ்டீல் பாடிகளை கொண்ட ரயில்களை விட கூடுதல் சிறப்பை கொண்டவை.
காரணம், ஸ்டீலை விட அலுமினியம் குறைவான எடை கொண்டது. இதன்மூலம் எரிவாயூ சேமிப்புக்கு உகந்ததாக இருக்கும். மற்றும் குறைவான மாசு வெளியேற்றமே இவற்றில் இருக்கும். இது இந்தியா போன்ற நாடுகளுக்கு முக்கிய தேவையாகும். காரணம் இந்தியாவில் பசுமை குடில் வாயுக்கள் ரயில்வேக்கள் மூலம் தான் அதிகம் வெளியேறுகின்றன. எனவே, அலுமினியம் பாடிக்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில்கள் கார்பன் தடத்தை குறைக்கும்.
அதேபோல, ஸ்டீலை விட அலுமினியம் துரு மற்றும் அரிப்பு ஆகிவற்றுடன் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கும். இதன் மூலம் வந்தே பாரத் ரயில்கள் பராம்பரிய ஸ்டீல் வகை ரயில்களை விட குறைவான பராமரிப்பு பணிகள், செலுவுகளை கொண்டவை. மேலும், இதில் உள்ள ஏரோடைனமிக் இன்ஜினின் டிசைன் மேம்பட்ட வேகத்தை தரும் தன்மை கொண்டது."
தற்போது இயங்கி வரும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள ரயில்களிலேயே அதிக சிறப்புகளை கொண்ட ரயிலாகும்.முழுவதும் ஏசி வசதிகொண்ட கோச்களையும், நவீன சொகுசு வசதிகொண்ட இருக்கைகளையும் கொண்டாதாகும். அலுமினியம் வந்தே பாரத் ரயில்கள் அதன் பயணத்தின் போது குறைந்த சத்தத்தை எழுப்பி, பயணிகளுக்கு சுகமான பயண அனுபவத்தை தரும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகார வழக்கு- 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றம்
முதல்கட்டமாக அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட 100 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான தயாரிப்பு மற்றும் 35 வருட பராமரிப்பு திட்டத்திற்கு TMH, Alstom மற்றும் Stadler ஆகிய நிறுவனங்கள் ஏலம் எடுக்க ஒப்பந்தம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Vande Bharat