ஹோம் /நியூஸ் /இந்தியா /

சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனை படைத்த இந்திய ரயில்வே

சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனை படைத்த இந்திய ரயில்வே

சரக்கு போக்குவரத்தில் சாதனை படைத்த இந்திய ரயில்வே

சரக்கு போக்குவரத்தில் சாதனை படைத்த இந்திய ரயில்வே

2022-23 நிதியாண்டில் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் மற்றொரு சிறப்பம்சம் என இந்தியன் ரயில்வே தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

இந்திய ரயில்வே இதுவரை இல்லாத வகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 115.80 மெட்ரிக் டன் சரக்குகள் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இது 2021 செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும் போது 9.15% கூடுதலாகும்.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் புள்ளி விவரத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் விரிவான தகவல்கள் உள்ளன. அதன்படி, தொடர்ந்து 25 மாதங்களாக ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படும் சரக்குகளின் அளவு இதற்கு முன்பு இருந்ததை விட தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த மாதத்தில் அதாவது 2022 செப்டம்பரில் 6.8 மெட்ரிக் டன் நிலக்கரி, அதைத்தொடர்ந்து 1.2 மெட்ரிக் டன் இரும்புத் தாது, 0.4 மெட்ரிக் டன் சிமெண்ட் மற்றும் க்ளிங்கர், 0.3 மெட்ரிக் டன் உரங்கள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி ரயில்வே சாதனை படைத்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் மற்றொரு சிறப்பம்சமாக அமைந்தது.

முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1575 ரேக்குகள் கொண்டு செல்லப்பட்டதுடன் ஒப்பிடுகையில், நிதியாண்டு 2022-23 இல் 2,712 ரேக்குகள் கொண்டு செல்லப்பட்டு, 72.2% வளர்ச்சியைப் பதிவு செய்தன.

ஏப்ரல் 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை ரயில்களில் கொண்டு செல்லப்பட்ட மொத்த சரக்குகளின் அளவு 736.68 மெட்ரிக் டன் ஆகும். இது 2021-22 இன் அளவான 668.86 மெட்ரிக் டன்னை விட 10.14% அதிகம்.

இதையும் படிங்க: தாண்டியா ஆட்டமும் ஆட.. தசரா கூட்டமும் கூட..! களைகட்டிய நவராத்திரி விழா - பிரபலங்கள் கொண்டாட்டம்!

நாட்டில் மின்தேவை தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில் மின் உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் நிலக்கரி சரக்கு போக்குவரத்து கடந்த செப்டம்பர் மாதம் 17.3% உயர்ந்து 6.8 மெட்ரிக் டன் கையாளப்பட்டுள்ளன.அதேபோல், உரங்கள் போக்குவரத்து 7.9%, இரும்பு தாது போக்குவரத்து 10.8% உயர்வு கண்டுள்ளன.சரக்கு போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள உயர்வானது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வேகமெடுத்தை குறிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Indian Railways