ஹோம் /நியூஸ் /இந்தியா /

2023க்குள் 100% ரயில் பாதையை மின்மயமாக்க இலக்கு..

2023க்குள் 100% ரயில் பாதையை மின்மயமாக்க இலக்கு..

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வேயில் நடப்பாண்டில் 10 மாதத்திற்குள் 6,366 கிமீ தூர ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு தொடர் திட்டப்பணிகளை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் அனைத்து ரயில்வே பாதைகளையும் அகல ரயில் பாதைகளாக மாற்றவும், இந்த ரயில் பாதைகளை முழுவதும் மின்மயாமாக்கவும் துரிதமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டில் 6,500 கிமீ தூரத்தை மின்மயமாக்க இலக்கு நிர்ணயத்துள்ளது.

  இந்த இலக்கை நிறைவேற்றும் விதத்தில்  நடப்பாண்டில் 10 மாதத்திற்குள் 6,366 கிமீ பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

  இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அகலப்பாதை இணைப்புகள் அனைத்தையும் மின்மயமாக்கும் இலக்கை அடைய இந்திய ரயில்வே தீவிரமாக உள்ளது. இதனால் எரிவாயு பயன்பாடு மேம்பட்டு அதற்கான செலவு குறைவதோடு, வெளிநாட்டு பரிமாற்றத்தில் பன்மடங்கு சேமிப்பும் ஏற்படும்.

  இந்திய ரயில்வேயின் வரலாற்றில் 2021-22இல் அதிகபட்சமாக 6,366 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டன. இதற்கு முன்னர் 2020-21இல் 6,015 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டன. அக்டோபர் மாத இறுதி வரை, இந்திய ரயில்வேயின் 65,141 கிலோமீட்டர் அகலப்பாதை வழித்தடங்களில் 53,470 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது மொத்த அகலப்பாதை மின்மயமாக்கல் பணியில் 82.08% ஆகும்.

  இதையும் படிங்க: சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து அகலப் பாதையையும் மின்மயமாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயில் ஜிரோ கார்பன் வெளியேற்றம் என்ற இலக்கை அடைந்து பசுமை ரயில்வேயாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Electric Train, Indian Railways, Railway