’ஐஆர்சிடியில் கவர்ச்சி விளம்பரங்கள்’! இளைஞரின் கேள்விக்கு ரயில்வேயின் நச் பதில்

IRCTC டிக்கெட் புக்கிங் ஆப்பில் இப்படி மோசமான விளம்பரங்கள் அடிக்கடி தோன்றுவது எரிச்சலூட்டுகிறது" எனக் கூறி மத்திய ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே அமைச்சகம் மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றை டேக் செய்து பதிவிட்டார்.

news18
Updated: May 29, 2019, 10:25 PM IST
’ஐஆர்சிடியில் கவர்ச்சி விளம்பரங்கள்’! இளைஞரின் கேள்விக்கு ரயில்வேயின் நச் பதில்
ஐ.ஆர்.சி.டி.சி
news18
Updated: May 29, 2019, 10:25 PM IST
ஐ.ஆர்.சி.டி.சி ஆஃப்பில் கவர்ச்சியான விளம்பரங்கள் வருகின்றன என்ற புகார் கூறிய இளைஞருக்கு இந்தியன் ரயில்வே நிர்வாகம் அளித்த பதில் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜார்கண்டின் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆனந்தகுமார் என்பவர், ஐஆர்சிடிசி ஆப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பெண்களின் உள்ளாடை தொடர்பான விளம்பரங்கள் தெரிந்துள்ளன. இந்த விளம்பரங்களால் கடுப்பான அவர், அந்த கூகுள் விளம்பரத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ``IRCTC டிக்கெட் புக்கிங் ஆப்பில் இப்படி மோசமான விளம்பரங்கள் அடிக்கடி தோன்றுவது எரிச்சலூட்டுகிறது" எனக் கூறி மத்திய ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே அமைச்சகம் மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றை டேக் செய்து பதிவிட்டார்.

ஐ.ஆர்.சி.டி.சி


அவருடைய பதிவை கருத்தில் கொண்டு ஐ.ஆர்.சி.டி.சி அவரை கேலி செய்யும் விதத்தில் பதில் அளித்துள்ளது. ஆனந்த் குமாரின் கேள்விக்கு இந்தியன் ரயில்வே சேவா ட்விட்டரில் அளித்த பதிலில், ‘ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் கூகுள் விளம்பரச் சேவைக்கான ஏடிஎக்ஸைப்(ADX) பயன்படுத்துகிறது. பயனாளர்களின் கூக்கிஸ் மற்றும் இணையதள ஹிஸ்டரியைப் பொறுத்தே பயனாளர்களுக்கு கூகுள் விளம்பரங்களைக் காண்பிக்கிறது.

எனவே, தயதுசெய்து, முதலில் உங்களுடைய பிரௌசர் ஹிஸ்டரியை அழியுங்கள். அப்போதுதான், இந்த விளம்பரங்கள் வருவதை தவிர்க்க முடியும்’ என்று பதிலளித்துள்ளது. இந்தியன் ரயில்வேயின் இந்தப் பதில் இணையத்தின் வைரலாகிவருகிறது.

Also see:

First published: May 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...