ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியன் ரயில்வேயின் 'நியூ டிஸ்போசபிள் ட்ராவல் கிட்' பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்தியன் ரயில்வேயின் 'நியூ டிஸ்போசபிள் ட்ராவல் கிட்' பற்றி உங்களுக்கு தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

நீங்கள் நீண்ட தூர பயணம் செய்வதாக இருந்தால், இந்த கிட்டில் முழு அளவிலான தொகுப்பு உள்ளது. இந்த கிட்டில் ஒரு போர்வை, பெட்ஷீட், தலையணை மற்றும் இன்னும் சில தேவையான பொருட்கள் இருக்கும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இந்திய ரயில்வே காலத்திற்கேற்றார் போல தன்னை மாற்றிக்கொள்ளும் மத்திய அரசின் ஒரு மாபெரும் நிறுவனம். இப்போது பயணிகளின் பயணத்தை பாதுகாப்பாகவும், பயணிகளுக்கு வசதியாகவும் செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோயால் பயணம் இப்போது வெகுவாக மாறிவிட்டது. கோவிட் -19 பரவுவதைத் தடுக்க இந்திய ரயில்வே அதன் படுக்கைகள், போர்வைகள் மற்றும் ரயில்களில் இருந்து கர்டைன்களை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கோவிட் -19 தடுப்பூசி நடைமுறைக்கு வந்து, பயணம் மிகவும் நிதானமாகி வருவதால், இந்திய ரயில்வே அதன் பயணிகளுக்கு ஒரு புதிய வசதியை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்திய ரயில்வே, 'நியூ டிஸ்போசபிள் ட்ராவல் கிட்'  என்ற ஒன்றை இப்போது தனது பயணிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த கிட் பயணிகளின் பயணத்தை வசதியாக மாற்றும், குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் மக்களுக்கு இது உண்மையில் ஒரு வரப்பிரசாதம் தான். டிராவல் கிட் டிஸ்போசபிள் என்பதால், அதன் பராமரிப்பு குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இந்திய ரயில்வேயின் நியூ டிஸ்போசபிள் ட்ராவல் கிட் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். 

டிஸ்போசபிள் ட்ராவல் கிட்டை எங்கே பெறுவது:

புது டெல்லி ரயில் நிலையத்தில் (New Delhi Railway Station) கடந்த திங்கள்கிழமை முதல் டிஸ்போசபிள் ட்ராவல் கிட் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. UV அடிப்படையிலான லக்கேஜ் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. 

பாதிப்புகள் ஏற்படாத வகையில் மேலும் முன்னெச்சரிக்கையாக உங்கள் லக்கேஜ்ஜை பக்காவாக பேக் செய்யும் சேவைகளுக்கு ரூ .50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் நிலையங்களில் உள்ள ஒரு ஸ்டாலில் இருந்து இந்த டிஸ்போசபிள் ட்ராவல் கிட்டை வாங்கலாம். 

புது டெல்லி ரயில் நிலையம் தவிர, டெல்லி ரயில் நிலையம் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலும் இந்த டிஸ்போசபிள் ட்ராவல் கிட் கிடைக்கும். இந்த வசதி விரைவில் மற்ற நிலையங்களிலும் தொடங்கப்படும் என்று ரயில்வே கூறியுள்ளது.

இந்திய ரயில்வேயின் இந்த டிஸ்போசபிள் ட்ராவல் கிட்டிற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?

ரூ .150, ரூ .300 போன்ற விலைகளுடன் பயணிகளுக்கு 3 வகையான டிஸ்போசபிள் ட்ராவல் கிட்கள் உள்ளன. கிட்டில் உள்ள பொருட்கள் விலைக்கு ஏற்ப வேறுபடுகின்றன. அதனால் உங்களுக்கு எந்த கிட் வேண்டுமோ அதற்கான பணத்தை கொடுத்து கிட்டை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இந்திய ரயில்வே டிஸ்போசபிள் ட்ராவல் கிட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கும்?

1.டிஸ்போசபிள் ட்ராவல் குட் மார்னிங் கிட் (Disposable travel Good morning kit): உங்களுக்கு ரயில் பயணத்தின்போது படுக்கை மற்றும் போர்வை தேவையில்லை என்றால் இந்த அடிப்படை கிட் மிகவும் பொருத்தமானது. இந்த கிட்டில் டூத் பேஸ்ட் மற்றும் டூத் பிரஷ் இருக்கும்.

2.டிஸ்போசபிள் ட்ராவல் கிட் ரூ .150 / - (Disposable travel kit) நீங்கள் கொஞ்ச தூரத்திற்கு மட்டும்தான் பயணம் செய்கிறீர்கள் என்றால் இந்த கிட் வாங்கலாம். இந்த கிட்டில் பயணிகளுக்கு ஒரு போர்வை இருக்கும்.

4.டிஸ்போசபிள் ட்ராவல் கிட்   ரூ .300 / - (Disposable travel kit )

Also read... உலோக கழிவுகளை கொண்டு இப்படியும் செய்யலாமா? சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையால் வியந்த மக்கள்!

நீங்கள் நீண்ட தூர பயணம் செய்வதாக இருந்தால், இந்த கிட்டில் முழு அளவிலான தொகுப்பு உள்ளது. இந்த கிட்டில் ஒரு போர்வை, பெட்ஷீட், தலையணை மற்றும் இன்னும் சில தேவையான பொருட்கள் இருக்கும். ஆகவே இது நிச்சயம் உங்களுக்கு உதவும்.

இந்தியாவில் கொரோனாவுக்கு முன்பு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 500 கோடி மக்கள் ரயில்களை பயன்படுத்தி பயணம் செய்து இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் ரயில்வேகென்று தனி பட்ஜெட் இருந்த காலமும் உண்டு. இது போன்ற மாபெரும் துறையில் மக்களின் வசதிக்காக செய்யப்படும் பல விஷயங்கள் உண்மையில் வரவேற்கத்தக்கது தான். அந்த வகையில் இந்த 'டிஸ்போசபிள் ட்ராவல் கிட்' நிச்சயம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Indian Railways